கொழும்பு – கட்டுநாயக்க விமான சேவை ஆரம்பம்
உள்நாட்டு விமானப் பயணத்தை விரிவுபடுத்துவதற்கும், சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் ஒரு பகுதியாக கொழும்பு-கட்டுநாயக்க சேவை மீண்டும் அறிமுகப்படுத்தப்படுகிறது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில், பேர ஏரியை நீர் விமான நிலையமாகப் பயன்படுத்தி கட்டுநாயக்கவிற்கும் – கொழும்புக்கும் இடையிலான விமான சேவைகள் 3-10-2025 அன்று உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
உள்நாட்டு விமானப் பயணத்தை விரிவுபடுத்துவதற்கும், சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் ஒரு பகுதியாக கொழும்பு-கட்டுநாயக்க சேவை மீண்டும் அறிமுகப்படுத்தப்படுகிறது.
ஜோன் கீல்ஸ் குழுமத்தின் துணை நிறுவனமான சினமன் ஏர்லைன்ஸ் இந்த விமானங்களை இயக்குவுள்ளதோடு ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் முன்பு 2011–2012 ஆம் ஆண்டில் நீர் சார்ந்த “ஜலதாரா” விமானங்களைத் தொடங்கியது, ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக சேவை இடைநிறுத்தப்பட்டது.
இந்நிலையில் நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர் தெரிவிக்கையில், அமைச்சர் பிமல் ரத்நாயக்க “இந்த முயற்சியின் மூலம், உள்நாட்டு விமான சேவைகளை மேம்படுத்துவதையும், பலாலி போன்ற பிராந்திய விமான நிலையங்களுக்கு செயற்பாடுகளை விரிவுபடுத்த அதிக நிறுவனங்களை ஊக்குவிப்பதையும் நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம். இதுபோன்ற முயற்சிகளுக்கு அதிகபட்ச ஆதரவை வழங்க அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது,” என்றார்.





