இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்க கொரியா முடிவு
இலங்கை அரசாங்கத்தின் முன்னுரிமைகளின் அடிப்படையில் தொடர்ந்து ஆதரவை வழங்க கொரிய அரசாங்கம் தயாராக உள்ளது என்றும் தூதுவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் முன்னுரிமைகளின் அடிப்படையில் தொடர்ந்து ஆதரவை வழங்க கொரிய அரசாங்கம் தயாராக இருப்பதாக இலங்கைக்கான கொரியத் தூதுவர் மியோன் லீ வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமநாயக்கவிற்கும், இலங்கைக்கான கொரியத் தூதுவர் மியோன் லீயிக்கும் இடையிலான சந்திப்பு நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
கோரியாவின் பு கொரியாவின் புதிய ஆட்சியின் கீழ் இலங்கை அரசாங்கத்தின் முன்னுரிமைகளை அடையாளம் கண்டு நெருக்கமாக செயற்பட கொரியா தயாராகவிருப்பதாக இலங்கைக்கான கொரியத் தூதுவர் மியோன் லீ தெரிவித்தார்.
இலங்கை அரசாங்கத்தின் முன்னுரிமைகளின் அடிப்படையில் தொடர்ந்து ஆதரவை வழங்க கொரிய அரசாங்கம் தயாராக உள்ளது என்றும் தூதுவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.
கோரிய சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் புதிய பிரதிநிதிகள் ஜனாதிபதியின் செயலாளரை இதன்போது சந்தித்து கலந்துரையாடினர்.இலங்கையில் முன்னெடுக்கப்படும் கொரிய சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் திட்டங்களை விரைவாக முடிப்பது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.





