Breaking News
அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிற்கு மஹிந்த நன்றி
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிற்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று கொழும்பில் இடம்பெற்றது.
இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிற்கு நன்றி தெரிவித்தார்.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிற்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று கொழும்பில் இடம்பெற்றது.
தனது இராஜதந்திர சேவையை நிறைவு செய்து 16-01-2026 அன்று முதல் நாட்டை விட்டு வெளியேறும் அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தனது சேவை காலத்தில் இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதன்போது நன்றி தெரிவித்ததுடன், அவரது எதிர்கால நடவடிக்கைகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.