பிரசன்ன ரணவீரவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்
இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட சிங்கப்பூர் சரத் எனப்படும் தொன் சரத் குமார முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீர ஆகியோர் தொடர்ந்த்தும் விளக்கமரியலிலேயே உள்ளனர்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர உள்ளிட்ட 2 சந்தேகநபர்களின் பிணை கோரிக்கையை நிராகரித்த மஹர நீதிவான் நீதிமன்றம் அவர்களை எதிர்வரும் 25ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.சந்தேகநபர்கள் மஹர நீதவான் காஞ்சனா நெரஞ்சலா டி சில்வா முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
களனிய கிரிபத்கொட புதிய நகர திட்டத்துக்கு அமைய கையகப்படுத்தப்பட்ட காணி ஒன்றினை 2010 ஆம் ஆண்டு போலி ஆவணம் தயாரித்து தனியாருக்கு விற்பனை செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மூவருக்கு கம்பஹா மேல் நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதித்தது.
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா களனி பிரதேச சபையின் அப்போதைய தலைவர் ஜயந்த கப்ரால் மற்றும் மோசடி செய்து விற்கப்பட்ட காணியின் தற்போதைய உரிமையாளரான நவீன் வீரகோன் ஆகியோரையே இவ்வாறு பிணையில் செல்ல கம்பஹா மேல் நீதிமன்ற நீதிபதி டப்ளியூ.கே.டி. விஜேரத்ன அனுமதியளித்தார். குறித்த மூவர் சார்பிலும் கம்பஹா மேல் நீதிமன்றில் முன் வைக்கப்பட்ட பிணை மனுக்களை விசாரித்தே நீதிபதி டப்ளியூ.கே.டி. விஜேரத்ன இதற்கான உத்தர்வை பிறப்பித்தார்.
எவ்வாறாயினும் இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட சிங்கப்பூர் சரத் எனப்படும் தொன் சரத் குமார முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீர ஆகியோர் தொடர்ந்த்தும் விளக்கமரியலிலேயே உள்ளனர். இதனைவிட இந்த விவகாரத்தில் கைது செய்ய களனி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் மில்ரோய் பெரேராவை கைது செய்ய தொடர் விசாரணைகள் இடம்பெறுவதாக சி.ஐ.டி.யினர் முன்னர் மஹர நீதிவான் நீதிமன்றுக்கு தெரிவித்திருந்தனர்.





