Breaking News
ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக தீவிரமடைந்து வரும் மீனவர்களின் போராட்டம்
"அரசாங்கமே எமது வயிற்றில் அடிக்காதே", "இயந்திரங்களைப் பயன்படுத்த அனுமதி கொடு" போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தி அவர்கள் கோஷமிட்டனர்.
மீனவர்கள், கரவலைகளை இழுக்க உழவு இயந்திரங்களைப் பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஐந்தாவது நாளாகவும் மீனவர் சங்கத்தினர் சத்தியாகிரகப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
"அரசாங்கமே எமது வயிற்றில் அடிக்காதே", "இயந்திரங்களைப் பயன்படுத்த அனுமதி கொடு" போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தி அவர்கள் கோஷமிட்டனர். மணல் தரையிலேயே வலைகளை இழுப்பதால் சூழல் பாதிக்கப்படாது எனவும், இதுவே எமது வாழ்வாதாரம் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர். இம்மாதம் 5 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்படும் இந்தப் போராட்டத்தில் ஏனைய மாவட்டங்களை சேர்ந்த மீனவர்களும் ஆதரவாகக் கலந்துகொண்டனர்.





