நீர்கொழும்பு மாநகர மேயர் இராஜினாமா
எவ்வாறாயினும், இந்தமுறை ரொபர்ட் ஹீன்கெந்த தனது பதவியிலிருந்து உத்தியோகபூர்வமாக விலகியுள்ளார். .
தேசிய மக்கள் சக்தியின் அதிகாரத்தின் கீழ் இருக்கும் நீர்கொழும்பு மாநகர மேயர் சட்டதரணி ரொபட் ஹீன்கெந்த மேயர் பதவியிலிருந்தும் மாநகர சபை உறுப்பினர் பதவியிலிருந்தும் இராஜினாமா செய்துள்ளார்.
அவர் தனது இராஜினாமா கடிதத்தை 17-08-2026 அன்று மாநகர ஆணையாளருக்கு அனுப்பியுள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காகவே அவர் தனது பதவியிலிருந்து விலக தீர்மானித்துள்ளதாகவும் முன்னதாக பல சந்தர்ப்பங்களில் அவர் மாநகர மேயர் பதவியிலிருந்து விலகுவதாகக் கூறியிருந்தாலும், பின்னர் அந்த முடிவை அவர் மாற்றிக்கொண்டுள்ளார்.. எவ்வாறாயினும், இந்தமுறை ரொபர்ட் ஹீன்கெந்த தனது பதவியிலிருந்து உத்தியோகபூர்வமாக விலகியுள்ளார். .
மேயரின் பதவி விலகலை அடுத்து, தற்போதைய பிரதி மேயர் சாமர பெர்னாந்து மேயராகவும் பிரதி மேயராக தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் சட்டத்தரணி எம்.என்.எம். பஸீர் ஆகியோரை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.
இருந்தபோதும் தேசிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட மேல்மட்ட அரசியல் அழுத்தத்தினாலேயே இந்த இராஜினாமா இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.





