கடற்படைக்கு செயற்கைக்கோள் தொடர்பாடல் கட்டமைப்பினை வழங்கும் அமெரிக்கா
நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் உதவி இராஜாங்க செயலாளர் போல் கபூரை பாதுகாப்பு பிரதியமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) அருண ஜயசேகர மற்றும் கடற்படையின் கட்டளை தளபதி வைஸ் அட்மிரல் கான்ச்சன பனாகொட ஆகியோர் கஜபாகு கப்பலுக்கு வரவேற்றனர்.
உலகின் மிகப் பரபரப்பான சில கப்பல் போக்குவரத்து வழித்தடங்களில் கடல்சார் இணைப்பைப் பலப்படுத்தும் வகையில் 'ஃப்ளீற் ப்ரோட்பான்ட்' செயற்கைக்கோள் தொடர்பாடல் தொழில்நுட்பத்தினை இலங்கைக் கடற்படைக்கு அமெரிக்க வழங்குமென கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிறுத்தப்பட்டிருந்த எஸ்.எல்.என்.எஸ் கஜபாகு கப்பில் வைத்து தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் போல் கபூர் 22-06-2026அன்று அறிவித்தார்.
நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் உதவி இராஜாங்க செயலாளர் போல் கபூரை பாதுகாப்பு பிரதியமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) அருண ஜயசேகர மற்றும் கடற்படையின் கட்டளை தளபதி வைஸ் அட்மிரல் கான்ச்சன பனாகொட ஆகியோர் கஜபாகு கப்பலுக்கு வரவேற்றனர்.
இதன்போது கடல்சார் ஒத்துழைப்பு, சர்வதேச கப்பல் போக்குவரத்ப் பாதைகளைப் பாதுகாத்தல், பிராந்திய பேரனர்த்த சூழ்நிலைகளைக் கையாள்வதற்கான நடவடிக்கைகளுக்கு உதவுதல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை முறியடிப்பதில் அமெரிக்க தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் பங்கு என்பன பற்றி விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.