Breaking News
மன்னாரில் 15 ஆவது நாளாகவும் போராட்டம்
குறித்த போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தலையில் கருப்பு பட்டி அணிந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் 17-08-2025 அன்று 15 ஆவது நாளாகவும் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மன்னார் மக்கள் மற்றும் இளையோர் ஒன்றிணைந்து முன்னெடுத்து வருகின்ற போராட்டத்திற்கு இன்றைய தினம் ஆதரவு வழங்கும் வகையில் பள்ளிமுனை மற்றும் பெரிய கரிசல் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் குறித்த போராட்டத்தில் இணைந்து கொண்டு தமது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
குறித்த போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தலையில் கருப்பு பட்டி அணிந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.