குடிவரவு கட்டுப்பாட்டாளர் ஜெனரலுக்கு எதிராக அவமதிப்பு குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு
நீதியரசர்களான ப்ரீத்தி பத்மன் சுரசேன, குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாமினால் நேற்று (13) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இலத்திரனியல் வீசா முறையை நடைமுறைப்படுத்துவதை இடைநிறுத்துவதற்கு நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவுக்கு கீழ்ப்படியத் தவறியமைக்காக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதியரசர்களான ப்ரீத்தி பத்மன் சுரசேன, குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாமினால் நேற்று (13) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மேலும், செப்டம்பர் 25-ம் தேதி குற்றச்சாட்டை முன்வைத்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு மனுதாரர் தரப்புக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலத்திரனியல் விசா விவகாரம் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்த தவறியமை தொடர்பில் நேற்று (13) நீதிமன்றில் நேரில் முன்னிலையாகுமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.