Breaking News
காஷ்மீர் பிராந்தியத்தில் உள்ள தனது குடிமக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் அறிவுறுத்தல்
லடாக் தவிர்த்து ஜம்மு-காஷ்மீர் பகுதிக்கு இஸ்ரேலியர்கள் செல்வதை தவிர்க்குமாறு இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், இஸ்ரேல் தனது குடிமக்களுக்கான பயண ஆலோசனையை புதுப்பித்துள்ளது. காஷ்மீர் பிராந்தியத்தில் உள்ளவர்களை உடனடியாக வெளியேறுங்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளது.
லடாக் தவிர்த்து ஜம்மு-காஷ்மீர் பகுதிக்கு இஸ்ரேலியர்கள் செல்வதை தவிர்க்குமாறு இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
தற்போது காஷ்மீரில் உள்ள இஸ்ரேலியர்கள் "உடனடியாக வெளியேற வேண்டும்" என்றும் உள்ளூர்ப் பாதுகாப்புப் படையினரின் அறிவுறுத்தல்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தேசியப் பாதுகாப்புப் பேரவை வெளியிட்டுள்ள தற்போதைய பயண ஆலோசனைக்கு ஏற்ப உள்ளது.





