ஜனாதிபதி அநுர வீட்டுக்குச் செல்ல இப்போதே தயாராக வேண்டும் - பலாங்கொட கஸ்ஸப தேரர்
2022 மக்கள் போராட்டத்தின் எஞ்சிய பகுதியை பூரணப்படுத்தவே வெளிநாட்டு புலனாய்வு சக்திகள் தற்போது செயற்பட்டு வருகின்றன.
வலுசக்தி காரணமாகவே கோட்டாபய ராஜபக்ஷ வீட்டுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த நிலையே அநுரகுமார திசாநாயக்கவுக்கும் ஏற்படும். அதனால் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் அரசாங்கம் வீட்டுக்கு செல்ல இப்போதே தயாராக இருக்குமாறு கேடடுக்கொள்கிறோமென பலாங்கொட கஸ்ஸப தேரர் தெரிவித்தர்.
கொழும்பு பெளத்த விகாரை வளாகத்தில் 12-03-2026 அன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், இலங்கை மின்சாரசபை சில தினங்களுக்கு முன்னர் இறுதிப்பயணம் சென்றது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுடன் இணைந்து மின்சாரசபையை இல்லாமலாக்கச் செய்ய நடவடிக்கை எடுத்தபோது, மின்சார சபை சட்டத்தை வாபஸ் பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்து 2024 ஜுன் மாதம் 6ஆம் திகதி நாங்கள் மேற்கொண்ட எதிர்ப்பு நடவடிக்கையின்போது என்னை பாராளுமன்றத்துக்கு முன்னால் கைதுசெய்தார்கள்.
இலங்கை அரசாங்கத்துக்கு சொந்தமான வளம் ஒன்றை வெளிநாட்டு அல்லது உள்நாட்டு தனியார் நிறுவனம் ஒன்றுக்கு விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்க எங்களுக்கு உரிமை இருக்கிறது. நாடொன்றின் மின்சாரசபையானது உயிர் நாடியாகும். அதனை நூறுவீதம் தனியார் மயப்படுத்துவதற்கு தேரர்கள் என்றவகையில் நாங்கள் எதிர்ப்பு. தனியார் பயப்படுத்துவதாக இருந்தால் அதிக பங்குகளை அரசாங்கத்தின் கீழ் வைத்துக்கொண்டே வழங்க வேண்டும்.
தற்போதும் இலங்கை மின்சாரசபையை 6 பகுதிகளாக பிரித்து வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் மின்சாரசபை தற்போதும் அரசாங்கத்துக்கு உரித்தானது என அந்த நிறுவனங்களின் தலைவர்கள் தெரிவிக்கின்றனர். இது மறைமுகமாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை என்பது எங்களுக்கு தெரியும். ஏனெனில் இந்த மின்சாரசபை சட்டம் தொடர்பில் நாங்கள் ஆரம்பத்தில் இருந்து ஆராய்ந்து வருகிறோம்.
இலங்கை மின்சாரசபையை தனியார் மயப்படுத்த இடமளிக்கப்போவதில்லை என தெரிவித்து எங்களுடன் இணைந்து போராட்டம் மேற்கொண்டவர்கள் தற்போது அதிகாரத்துக்கு வந்த பின்னர் அரச வளங்களை விற்பனை செய்து வருகின்றனர்.இவ்வாறான நிலையில் நாடு இருக்கும்போது, மக்கள் தொடர்ந்து இதனை பார்த்துக்கொண்டிருக்கிறதாவென மக்களை கேட்கிறோம்.
குறிப்பாக மின்சாரசபையை 6 பங்குகளாக பிரித்து விற்பனை செய்வதன் மூலம் இவர்கள் இதனை லாபமீட்டும் நிறுவனமாக மாற்றியமைப்பதற்கு இவ்வாறு மேற்கொள்வதாக தெரிவித்திருப்பதை நாங்கள் நம்பப்போவதில்லை. இலாபமீட்டும் நிறுவனமாக மாற்றுவதாக இருந்தால், ஏன் 6 பகுதிகளாக பிரிக்க வேண்டுமென கேட்கிறேம்.
மேலும் இந்த நிறுவனங்களின் தலைவர்களுக்கு வெளிநாட்டு புலனாய்வு பிரிவினரால் பணம் வழங்கினால் அவர்கள் இவர்களின் பொறியில் சிக்கமாட்டார்களா? அதனால் வெளிநாட்டு புலனாய்வு பிரிவினரால் இவர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் வழங்கினால், எமது வலுசக்தி துறைக்கு என்ன நடக்கும். ஏனெனில் இவர்களின் நோக்கம் இலாபமீட்டுவதாகும்.
எனவே வலுசக்தி காரணமாகவே கோட்டாபய ராஜபக்ஷ்வுக்கும் வீட்டுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். மின்சாரம் துண்டிக்கப்பட்டு, மக்கள் எரிவாயு, எரிபொருளுக்கு வரிசையில் நிற்கவேண்டிய நிலை ஏற்பட்டதன் பின்னரே மக்கள் வீதிக்கிறங்கி போராட்டம் நடத்தினார்கள்.
அந்த நிலையே அநுரகுமார திசாநாயக்கவுக்கும் ஏற்படும். அதனால் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் அரசாங்கம் வீட்டுக்கு செல்ல இப்போதே தயாராக இருக்குமாறு தெரிவிக்கிறோம். ஏனெனில் நாடு தற்போது பயணிக்கும் போக்கை பார்க்கும்போது எங்களுக்கு நம்பமுடியாமல் இருக்கிறது.
2022 மக்கள் போராட்டத்தின் எஞ்சிய பகுதியை பூரணப்படுத்தவே வெளிநாட்டு புலனாய்வு சக்திகள் தற்போது செயற்பட்டு வருகின்றன. ஜனாதிபதி அநுரகுமார இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளார். ஆனால் இந்தியா இலங்கையின் முதுகில் குத்தும் வகையில் ஈரான் கப்பலை இலங்கைக்கு அனுப்பி அமெரிக்காவுடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, இலங்கையை இந்த யுத்தத்துடன் நேரடி மோதலுக்கு இட்டுச்செல்ல முயற்சித்துள்ளது.
என்றாலும் அதிர்ஷ்டவசமாக அது அவ்வாறு இடம்பெறவில்லை. ஆனாலும் அமெரிக்காவும் ஈரானும் எங்களுடன் வைராக்கித்துடனே இருக்கின்றன. அதனால் அரசாங்கம் உடனடியாக புலனாய்வு துறையை பலப்படுத்தி செயற்படுத்த வேண்டும். அரசாங்கத்துக்கு என்ன செய்ய வேண்டும் என தெரியாமல் இருக்கிறது. அதனால் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றார்.





