Breaking News
தித்வா புயல் காரணமாக 639 உயிரிழப்புக்கள்
524 678 குடும்பங்களைச் சேர்ந்த 1 ,814, 421 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை 26, 841 குடும்பங்களைச் சேர்ந்த 85 ,351 பேர் தொடர்ந்தும் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தித்வா புயலால் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக நேற்று மாலை வரை 639 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதோடு, 193 பேர் காணாமல் போயுள்ளனர்.
524 678 குடும்பங்களைச் சேர்ந்த 1 ,814, 421 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை 26, 841 குடும்பங்களைச் சேர்ந்த 85 ,351 பேர் தொடர்ந்தும் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அத்தோடு 5346 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதோடு, 86, 245 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.