ஆறாம் தர சர்ச்சைக்குரிய ஆங்கில பாடத்தொகுதிக்கு சீல்: பிரதமர் ஹரிணி
பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படவில்லை. இந்த விடயத்தை முன்னிலைப்படுத்தி முழுமையான கல்வி மறுசீரமைப்பு மீது அச்சத்தை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டாம்.
ஆறாம் தர ஆங்கில பாடப்புத்தகத்தின் சர்ச்சைக்குரிய பாடத்தொகுதி முழுமையாக சீல் (முத்திரை) வைக்கப்பட்டுள்ளது. அவை
பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படவில்லை. இந்த விடயத்தை முன்னிலைப்படுத்தி முழுமையான கல்வி மறுசீரமைப்பு மீது அச்சத்தை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டாம். புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் சகல தரப்பினருடனும் வெளிப்படையாக பேசுவதற்கு தயாராகவே உள்ளோம் என கல்வி அமைச்சரும், பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 07-01-2026 அன்று நடைபெற்ற அமர்வின் போது புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, கல்வி எண்ணக்கரு தொடர்பில் கல்வி ஆலோசனை சபையில் விரிவாக ஆராயப்பட்டது. பாராளுமன்றத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் கலந்துக் கொண்டு யோசனைகளை முன்வைத்தார்கள். முன்வைக்கப்படும் சிறந்த விடயங்களை ஏற்றுக்கொள்வோம். வெளிப்படையான பேச்சுவார்த்தையில் ஈடுபட தயார்.
ஆறாம் தர ஆங்கில புத்தகத்தில் முறையற்ற வகையில் உள்ளடக்கப்பட்ட சர்ச்சைக்குரிய விடயம் குறித்து முறையான விசாரணைகள் பல்வேறு மட்டத்தில் மேற்கொள்ளப்படுகிறது. ஓய்வுப்பெற்ற அரச நிர்வாக அதிகாரியானள ரஞ்சித் ஆரியரத்ன தலைமையில் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த பாடத்தொகுதி முழுமையாக சீல் (முத்திரை) செய்யப்பட்டுள்ளது. பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படவில்லை. இந்த விடயத்தை முன்னிலைப்படுத்தி முழுமையான கல்வி மறுசீரமைப்பு மீது அச்சத்தை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டாம். தவறான விடயங்களை வெளியிட வேண்டாம்.புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் சகல தரப்பினருடனும் வெளிப்படையாக பேசுவதற்கு தயாராகவே உள்ளோம் என்றார்





