இலங்கைக்கு நியூஸிலாந்து ஒரு மில்லியன் டொலர்கள் உதவி
‘தித்வா' சூறாவளியினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவினால் இலங்கை பேரழிவுக்கு முகங்கொடுத்திருக்கிறது.
சர்வதேச மனிதாபிமான உதவிப்பங்காளி ஊடாக இலங்கைக்கு ஒரு மில்லியன் நியூஸிலாந்து டொலர் உடனடி மனிதாபிமான உதவியை வழங்குவதாக நியூஸிலாந்து வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
‘தித்வா' சூறாவளியினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவினால் இலங்கை பேரழிவுக்கு முகங்கொடுத்திருக்கிறது.
இதுகுறித்து கவலையை வெளிப்படுத்தி தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் நியூஸிலாந்து வெளிவிவகார அமைச்சர் வின்ஸ்டன் பீற்றர்ஸ், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சகலருக்கும் ஆழ்ந்த அனுதாகங்களைத் தெரிவிப்பதாகவும், இந்தக் கடினமான நேரத்தில் தாம் பாதிக்கப்பட்ட தரப்பினருடன் உடன்நிற்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை இலங்கைக்கான நியூஸிலாந்து உயர்ஸ்தானிகரகத்தில் உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் செய்யப்பட்டிருக்கும் பதிவில் சர்வதேச மனிதாபிமான உதவிப்பங்காளி ஊடாக இலங்கைக்கு ஒரு மில்லியன் நியூஸிலாந்து டொலர் உடனடி மனிதாபிமான உதவியை வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.





