ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி
அமெரிக்க டொலரின் கொள்வனவு விகிதம் 330.10 ரூபாவிலிருந்து 332.27 ரூபாவாகவும், விற்பனை விகிதம் 340.25 ரூபாவிலிருந்து 342.00 ரூபாவாகவும் உயர்வடைந்துள்ளது.
அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான ரூபாவின் பெறுமதி கடந்த வியாழக்கிழமையுடன் ஒப்பிடுகையில் மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
அதற்கமைய இலங்கை மத்திய வங்கியினால் நேற்றைய தினம் (5) வெளியிடப்பட்ட நாணயமாற்று விகிதங்களின்படி அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் விற்பனைப் பெறுமதி 342 ரூபாவாக அதிகரித்துள்ளது.
அத்தரவுகளின் பிரகாரம் நேற்று முன்தினம் வியாழக்கிழமையுடன் (4) ஒப்பிடுகையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விகிதம் 330.10 ரூபாவிலிருந்து 332.27 ரூபாவாகவும், விற்பனை விகிதம் 340.25 ரூபாவிலிருந்து 342.00 ரூபாவாகவும் உயர்வடைந்துள்ளது.
அதுமாத்திரமன்றி அவுஸ்திரேலிய டொலர், கனேடிய டொலர், யூரோ, ஸ்டேர்லிங் பவுன்ட், சுவிஸ் பிராங்க் பஹ்ரைன் மற்றும் குவைத் தினார், ஓமான் ரியால் உள்ளிட்ட மேலும் பல வெளிநாட்டு நாணயங்களுக்கு நிகராகவும் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.





