கஸ்ஸப தேரரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு திருகோணமலை நீதிவான் நீதிமன்றம் உத்தரவு
இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் ஜனவரி 6 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை கடற்கரை பகுதியில் சட்டவிரோத கட்டுமானம் அமைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு 11-11-2026 அன்று திருகோணமலை நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பிரதிவாதியான பலாங்கொட கஸ்ஸப தேரர் நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தினால், கஸ்ஸப தேரரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு திருகோணமலை நீதிவான் நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.
அதற்கமைய, இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் ஜனவரி 6 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை கடற்கரை பகுதியில் 2025 நவம்பர் 16 ஆம் திகதி பௌத்த தேரர்கள் சிலர் உள்ளிட்ட குழுவினரால் சட்ட விரோத கட்டுமானம் ஒன்று மேற்கொள்ளப்பட்டதன் பின்னர், அன்றைய தினம் இரவே அவ்விடத்தில் புத்தர் சிலையொன்று பிரதிஷ்டை செய்யப்பட்ட நிலையில் அங்கிருந்த தரப்பினருக்கும் பொலிஸாருக்கும் இடையில் அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.
கடற்கரையில் சட்டவிரோதமாக புத்தர் சிலையொன்றை பிரதிஷ்டை செய்தமை மற்றும் சட்டவிரோத கட்டுமானத்தை அமைந்தவை தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, முறைப்பாட்டாளர் தரப்பு சார்பில் மூன்றில் ஆஜரான பொலிஸார் விடயங்களை முன்வைக்கையில், சந்தேகநபரான பலாங்கொட கஸ்ஸப தேரர் இன்றைய தினம் திறந்த நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை எனத் தெரிவித்தனர்.
மூன்றில் முன்வைக்கப்பட்ட விடயங்களை பரிசீலித்த நீதிவான், இந்த வழக்கின் பிரதிவாதிகளான பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழுவினர் நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தினால், தேரர் உள்ளிட்ட குழுவினரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டார்.





