Breaking News
இரண்டு அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள்
இரண்டு அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இரண்டு அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கை நிர்வாக சேவையின் சிறப்பு தர அதிகாரியான சட்டத்தரணி ரோஷன் கமகே, டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளராக பணியாற்றிய டி.ஆர்.டபிள்யூ.எஸ். தனபால, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர்களுக்கான நியமன கடிதங்களை, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமநாயக்க 10-11-2026 அன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து உத்தியோகபூர்வமாகக் கையளித்தார்.





