நோபளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நான் மிகுந்த மனவேதனை அடைகிறேன்: அமைச்சர் விஜித ஹேரத்
இச்சவாலான காலகட்டத்தை எதிர்கொண்டுள்ள நேபாள அரசாங்கத்துடனும் மக்களுடனும் இலங்கை முழுமையாக உறுதுணையாக நிற்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
நேபாளத்தின் ரசுவா மாவட்டம் மற்றும் ஏனைய பகுதிகளில் ஏற்பட்டள்ள வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக நான் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், இச்சவாலான காலகட்டத்தை எதிர்கொண்டுள்ள நேபாள அரசாங்கத்துடனும் மக்களுடனும் இலங்கை முழுமையாக உறுதுணையாக நிற்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
அவருடைய பதிவில், பாதிக்கப்பட்ட அனைவருக்கும், குறிப்பாக இந்த கடினமான சூழலை எதிர்கொண்டுள்ள குடும்பங்கள் மற்றும் சமூகங்களுக்கு எனது அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன். நிவாரணம், மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள நேபாள அதிகாரிகள் மற்றும் அனைத்துப் பணியாளர்களின் முயற்சிகளையும் நான் பாராட்டுகிறேன் என்றுள்ளது.





