புத்தாக்கங்களை மேற்கொள்ளும் நம்பிக்கையைப் மக்களிடையே கட்டியெழுப்புவது எமது பொறுப்பு - பிரதமர்
'வளமான தேசம் - அழகான வாழ்க்கை' என்ற தேசிய கொள்கை பிரகடனத்திற்கு இணங்க சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களின் ஆலோசனைக் குழு மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரின் பங்களிப்புடன் இந்த மூலோபாயக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
தேசிய சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில் மூலோபாயக் கட்டமைப்பு 2026 ஆனது இத்துறைக்குத் தேவையான கொள்கை ரீதியான தொடர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மையைக் கொண்டுவருவதால் அது மிகவும் முக்கியமானது. ஒரு அரசாங்கம் என்ற வகையில், நிலைத்தன்மையைக் கொண்டுவருவது, ஒத்துழைப்பை வளர்க்கும் ஒரு சூழலை உருவாக்குவது மற்றும் இடர்களை எதிர்கொண்டு புத்தாக்கங்களை மேற்கொள்ளும் நம்பிக்கையைப் மக்களிடையே கட்டியெழுப்புவது எமது பொறுப்பாகும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
தொழில் மற்றும் தொழில்முயற்சி மேம்பாட்டு அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'தேசிய மூலோபாயக் கட்டமைப்பு 2026' தொடர்பான கலந்துரையாடலின் இரண்டாம் நாள் நிகழ்வு 14-05-2026அன்று கொழும்பில் நடைபெற்றது.
சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சியாளர்களை வலுவூட்டும் நோக்கில் இந்த உத்தியோகபூர்வ கட்டமைப்பு, தொழில் மற்றும் தொழில்முயற்சி மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி மற்றும் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க ஆகியோரின் தலைமையில் நேற்று முன்தினம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
'வளமான தேசம் - அழகான வாழ்க்கை' என்ற தேசிய கொள்கை பிரகடனத்திற்கு இணங்க சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களின் ஆலோசனைக் குழு மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரின் பங்களிப்புடன் இந்த மூலோபாயக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
வணிகங்களை இலகுவாகப் பதிவு செய்தல், நவீன தொழில்நுட்பங்களுக்கான அணுகல், விசேட நிதி வசதிகள் மற்றும் ஆலோசனைகளை இலவசமாகப் பெற்றுக்கொள்ளல். பாரம்பரிய முறைகளில் இருந்து விலகி தொழில்முயற்சியாளர்களின் வளர்ச்சியை நேரடியாக ஆதரித்தல் இதன் பிரதான நோக்கங்களாகும்.





