பாதாள உலகக் குழுவின் செயற்பாடு முடிவுக்குக் கொண்டு வரப்படும்: அமைச்சர் ஹர்சன நாணயக்கார
பாதாள உலகக் குழுவைச் சேர்ந்தவர்கள் எவ்வளவு பலம் பொருந்தியவர்களாக இருப்பினும், அவர்களது செயற்பாடு எமது ஆட்சிக் காலத்தில் முடிவுக்குக் கொண்டு வரப்படும் என்பதை உறுதியாகக் கூறுகின்றேன். அவர்களுக்கு எவ்விதத்திலும் தலைதூக்க இடமளிக்கப் போவதில்லை என நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்சன நாணயக்கார தெரிவித்தார். கொழும்பில் 02-01-2026அன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். அமைச்சர் மேலும் உரையாற்றுகையில், பாதாள உலகக் குழுவைச் சேர்ந்தவர்கள் எவ்வளவு பலம் பொருந்தியவர்களாக இருந்தாலும், அவர்கள் எப்போது உருவானவர்களாக இருந்தாலும், அவர்களது செயற்பாடு எமது ஆட்சிக் காலத்தில் முடிவுக்குக் கொண்டு வரப்படும் என்பதை நான் உறுதியாகக் கூறுகின்றேன். இனிவரும் காலத்தில் பாதாள உலகத்தினர் விளையாடுவதற்கு நாம் இடமளிக்கப்போவதில்லை. நாட்டில் உருவாகியுள்ள நெருக்கடி கடந்த 20 அல்லது 30 ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்ட தவறான கொள்கை முடிவுகளால் ஏற்பட்டதே தவிர, கடந்த சில ஆண்டுகளில் உருவானது அல்ல. எவரது ஆட்சியில் இது உருவாகியிருப்பினும் அதற்குத் தீர்வு காண்பது எமது பொறுப்பாகும். போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்காகப் போதைப்பொருள் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு வருகிறோம். இதன் மூலம் மேல் நீதிமன்றத்தினூடாகப் பிணை வழங்கக்கூடிய வகையில் மாற்றங்கள் செய்யப்படும். அத்துடன், அரச இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களத்திற்கு புதிய அதிகாரிகளை நியமிப்பதன் மூலம், தற்போது ஒரு வருடம் வரை தாமதமாகும் பரிசோதனை அறிக்கைகளை மூன்று மாதங்களுக்குள் பெற்றுக்கொள்ளும் பொறிமுறையை உருவாக்குவோம். சிறைச்சாலைகளில் நிலவும் நெருக்கடியைக் குறைக்க 'சமூக சீர்திருத்தச் சட்டம்' அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் நன்னடத்தை கொண்ட கைதிகள் தமது தண்டனைக் காலத்தின் இறுதிக் கட்டத்தில் சமூகத்தோடு இணைந்து செயற்பட வாய்ப்பளிக்கப்படும்.பாதாள உலகக் குழுக்களிடமிருந்து சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் தமக்கும் கூட தொலைபேசி ஊடாக அச்சுறுத்தல்கள் வருகின்றன. அச்சுறுத்தல்களுக்கு அஞ்சி அதிகாரிகள் ஒருபோதும் குற்றவாளிகளுக்கு ஆதரவாகச் செயற்படக் கூடாது. அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தேவையான ஆயுதங்கள் மற்றும் வாகன வசதிகளை வழங்க ஆலோசித்து வருகிறோம். ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் தலைமையிலான இந்த அரசாங்கம், பாதாள உலகமெனும் புற்றுநோயை இந்நாட்டிலிருந்து வேரோடு ஒழித்தே தீரும். போதைப்பொருள் புழக்கத்தை முற்றாக ஒழிக்க முடியாவிட்டாலும், அதனை ஆகக்குறைந்த மட்டத்திற்கு நாம் நிச்சயம் கொண்டு வருவோம் என்றார்.
பாதாள உலகக் குழுவைச் சேர்ந்தவர்கள் எவ்வளவு பலம் பொருந்தியவர்களாக இருப்பினும், அவர்களது செயற்பாடு எமது ஆட்சிக் காலத்தில் முடிவுக்குக் கொண்டு வரப்படும் என்பதை உறுதியாகக் கூறுகின்றேன். அவர்களுக்கு எவ்விதத்திலும் தலைதூக்க இடமளிக்கப் போவதில்லை என நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்சன நாணயக்கார தெரிவித்தார்.
கொழும்பில் 02-01-2026அன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அமைச்சர் மேலும் உரையாற்றுகையில், பாதாள உலகக் குழுவைச் சேர்ந்தவர்கள் எவ்வளவு பலம் பொருந்தியவர்களாக இருந்தாலும், அவர்கள் எப்போது உருவானவர்களாக இருந்தாலும், அவர்களது செயற்பாடு எமது ஆட்சிக் காலத்தில் முடிவுக்குக் கொண்டு வரப்படும் என்பதை நான் உறுதியாகக் கூறுகின்றேன். இனிவரும் காலத்தில் பாதாள உலகத்தினர் விளையாடுவதற்கு நாம் இடமளிக்கப்போவதில்லை. நாட்டில் உருவாகியுள்ள நெருக்கடி கடந்த 20 அல்லது 30 ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்ட தவறான கொள்கை முடிவுகளால் ஏற்பட்டதே தவிர, கடந்த சில ஆண்டுகளில் உருவானது அல்ல.
எவரது ஆட்சியில் இது உருவாகியிருப்பினும் அதற்குத் தீர்வு காண்பது எமது பொறுப்பாகும். போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்காகப் போதைப்பொருள் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு வருகிறோம். இதன் மூலம் மேல் நீதிமன்றத்தினூடாகப் பிணை வழங்கக்கூடிய வகையில் மாற்றங்கள் செய்யப்படும். அத்துடன், அரச இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களத்திற்கு புதிய அதிகாரிகளை நியமிப்பதன் மூலம், தற்போது ஒரு வருடம் வரை தாமதமாகும் பரிசோதனை அறிக்கைகளை மூன்று மாதங்களுக்குள் பெற்றுக்கொள்ளும் பொறிமுறையை உருவாக்குவோம்.
சிறைச்சாலைகளில் நிலவும் நெருக்கடியைக் குறைக்க 'சமூக சீர்திருத்தச் சட்டம்' அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் நன்னடத்தை கொண்ட கைதிகள் தமது தண்டனைக் காலத்தின் இறுதிக் கட்டத்தில் சமூகத்தோடு இணைந்து செயற்பட வாய்ப்பளிக்கப்படும்.பாதாள உலகக் குழுக்களிடமிருந்து சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் தமக்கும் கூட தொலைபேசி ஊடாக அச்சுறுத்தல்கள் வருகின்றன. அச்சுறுத்தல்களுக்கு அஞ்சி அதிகாரிகள் ஒருபோதும் குற்றவாளிகளுக்கு ஆதரவாகச் செயற்படக் கூடாது.
அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தேவையான ஆயுதங்கள் மற்றும் வாகன வசதிகளை வழங்க ஆலோசித்து வருகிறோம். ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் தலைமையிலான இந்த அரசாங்கம், பாதாள உலகமெனும் புற்றுநோயை இந்நாட்டிலிருந்து வேரோடு ஒழித்தே தீரும். போதைப்பொருள் புழக்கத்தை முற்றாக ஒழிக்க முடியாவிட்டாலும், அதனை ஆகக்குறைந்த மட்டத்திற்கு நாம் நிச்சயம் கொண்டு வருவோம் என்றார்.





