நாட்டை வந்தடைந்தார் ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர்
அக்கூட்டத்தில் இருநாடுகளுக்கும் இடையிலான அரசியல் தொடர்புகள், பொருளாதார ஒத்துழைப்பு, வர்த்தகம், சுற்றுலா, வலுசக்தி உள்ளிட்ட துறைசார் ஒத்துழைப்பு மற்றும் சமகால பிராந்திய நிலைவரங்கள் என்பன தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்படும்.
கொழும்பில் நடைபெறவுள்ள 11 ஆவது இலங்கை - ரஷ்ய இருதரப்பு அரசியல் கலந்தாராய்வுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் ஆன்ரே ருடென்கோ உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு 31-03-2026 அன்று நாட்டை வந்தடைந்தார்.
மத்திய கிழக்கில் மூண்டிருக்கும் போருக்கு மத்தியில் கடந்த வாரம் ரஷ்ய வலுசந்தி பிரதி அமைச்சர் றோமன் மார்ஷவின் நாட்டுக்கு வருகைதந்திருந்துடன், மத்திய கிழக்கில் நிலவும் போர்ச்சூழல் காரணமாக ஏற்படக்கூடிய எந்தவொரு சவாலையும் எதிர்கொள்வதற்கு இலங்கைக்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக உறுதியளித்திருந்தார்.
இவ்வாறானதொரு பின்னணியில் நாளைய தினம் (2) கொழும்பில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சில் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் மற்றும் ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் ஆன்ரே ருடென்கோ ஆகியோரின் இணைத்தலைமையில் 11 ஆவது இலங்கை - ரஷ்ய இருதரப்பு அரசியல் கலந்தாராய்வுக் கூட்டம் நடைபெறவுள்ளது. அக்கூட்டத்தில் இருநாடுகளுக்கும் இடையிலான அரசியல் தொடர்புகள், பொருளாதார ஒத்துழைப்பு, வர்த்தகம், சுற்றுலா, வலுசக்தி உள்ளிட்ட துறைசார் ஒத்துழைப்பு மற்றும் சமகால பிராந்திய நிலைவரங்கள் என்பன தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்படும்.
இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக நாட்டை வந்தடைந்த ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் ஆன்ரே ருடென்கோ ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் உள்ளடங்கலாக அரசாங்கத்தின் உயர்மட்டப் பிரதிநிதிகளுடன் சந்திப்புக்களையும் நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.





