அமைச்சர் ஜயகொடிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் ஏப்ரல் 10ஆம் திகதி
சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் 19-03-2026 அன்று பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழு கூடிய போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பை ஏப்ரல் 10ஆம் திகதி நடத்துவதற்கு பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் 19-03-2026 அன்று பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழு கூடிய போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது எதிர்வரும் ஏப்ரல் 7, 9 மற்றும் 10ஆம் திகதிகளில் பாராளுமன்ற கூட்டங்களை நடத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் 9ஆம் திகதி பிற்பகல் 2 மணி முதல் 5.30 மணி வரையில் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தை நடத்துவதற்கும் 10ஆம் திகதி முற்பகல் 11.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும் வலுசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.





