செஞ்சிலுவை சங்கத்தின் பங்கேற்பை கோரிய இலங்கை
செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் அண்மையில் முக்கிய வெளிப்படுத்தல்களைச் செய்திருந்த மரணதண்டனை கைதி லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவை சிறைச்சாலைக்கு சென்று சந்தித்த காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின், அவரிடம் விடயங்களைக் கேட்டறிந்துகொண்டனர்.
செம்மணி மனிதப்புதைகுழி விவகாரத்தில் அகழ்வு மற்றும் பகுப்பாய்வு நடவடிக்கைகளில் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் நிபுணத்துவத்தைக்கோரி அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அழைப்புவிடுத்திருப்பதாகவும், அதற்கமைய இச்செயன்முறையில் செஞ்சிலுவை சங்கம் வெகுவிரைவில் பங்கேற்கும் எனவும் அறியமுடிகிறது.
செம்மணி சித்துபாத்தி மனிதப்புதைகுழியின் அகழ்வுப்பணிகள் தொடர்ந்து 45 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டன. அதன்படி இதுவரையான காலப்பகுதியில் மொத்தமாக 240 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டிருப்பதுடன், அவற்றில் 239 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் செம்மணி மனிதப்புதைகுழி விவகாரத்தைப் பொறுத்தமட்டில் அகழ்வுப்பணிகளை முன்னெடுப்பதற்கு அவசியமான நிதியைப் பெற்றுக்கொடுத்தல், கண்காணிப்பு மற்றும் ஆவணப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளல் உள்ளிட்ட விடயங்களில் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் அதன் பங்களிப்பினை வழங்கிவருகிறது.
அதுமாத்திரமன்றி செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் அண்மையில் முக்கிய வெளிப்படுத்தல்களைச் செய்திருந்த மரணதண்டனை கைதி லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவை சிறைச்சாலைக்கு சென்று சந்தித்த காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின், அவரிடம் விடயங்களைக் கேட்டறிந்துகொண்டனர்.
இவ்வாறானதொரு பின்னணியில் மனிதப்புதைகுழிகள் விவகாரத்தைக் கையாள்வதில் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்துக்கு நீண்டகால அனுபவமும், முறையான நிபுணத்துவமும் உள்ள போதிலும், அரசாங்கம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட கட்டமைப்புக்களால் உத்தியோகபூர்வமாக அழைப்புவிடுக்கப்படாததன் காரணமாக குறிப்பாக செம்மணி மனிதப்புதைகுழி விவகாரத்தில் செஞ்சிலுவை சங்கம் பங்கேற்கவில்லை.
இந்நிலையில் அண்மையில் செம்மணி மனிதப்புதைகுழி விவகாரத்தில் அகழ்வு மற்றும் பகுப்பாய்வு நடவடிக்கைகளில் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் நிபுணத்துவத்தைக்கோரி காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் வேண்டுகோளுக்கு அமைவாக நீதியமைச்சினால் உத்தியோகபூர்வமாக அழைப்புவிடுக்கப்பட்டிருப்பதாக அறியமுடிகிறது. அதுமாத்திரமன்றி மேற்படி வேண்டுகோளுக்கு இணங்க, இச்செயன்முறையில் வெகுவிரைவில் செஞ்சிலுவை சங்கம் பங்கேற்கும் எனவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.





