ஐ.நா.அறிக்கைக்கு போராட்டக்காரர்கள் தீ வைப்பு
போராட்டத்தின் நேற்றைய இறுதி நாளில் ஒரு மணியளவில் கவனயீர்ப்பு போரட்டத்தை முன்னெடுத்து தீப்பந்தங்களை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழில் சுழற்சிமுறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தின் இறுதி நாளில் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதோடு அரசாங்கத்தால் ஐ.நா. வுக்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை தீ வைத்து எரிக்கப்பட்டது.
செம்மணியில் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழ் மக்களுக்கு சர்வதேச நீதிகோரி நடத்தப்பட்ட கடந்த மாதம் 25ஆம் திகதி முதல் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் 01-10-2025 அன்று நிறைவுக்கு வந்தது.
இந்தப் போராட்டத்தில் வடக்கின் ஐந்து மாவட்டங்களை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், அரசியல்வாதிகள், செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
போராட்டத்தின் நேற்றைய இறுதி நாளில் ஒரு மணியளவில் கவனயீர்ப்பு போரட்டத்தை முன்னெடுத்து தீப்பந்தங்களை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேவேளை சர்வதேச சிறுவர் தினத்தில் இனப்படுகொலை செய்யப்பட்ட சிறுவர்களுக்கு நீதி கோரியும் கோஷங்களை எழுப்பினர்.
அத்துடன் போராட்டத்தில் கலந்துகொண்டவர்ககள், உள்நாட்டு பொறிமுறையை நிராகரிக்கின்றோம், தமிழ் இனவழிப்புக்கும் காணாமல் ஆக்கப்படுதல் போர் குற்றங்கள் மற்றும் மனிதப் புதைகுழிகள் குறித்து நாம் சர்வதேச சுயாதீன விசாரணையை மட்டுமே கோருகின்றோம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர்.
இப்போராட்டத்தின் நிறைவில் ஆர்ப்பாட்டக்காரர்க ளால் அறிக்கை ஒன்று வாசிக்கப்பட்டு அந்த அறிக்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பிவைக் கப்படவுள்ள அதேவேளை, இலங்கை அரசாங்கத்தால் ஐ.நா.வுக்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை போராட்டக்காரர்களால் தீ வைத்துக் கொழுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.





