58 இலங்கை இராணுவத்தினருக்கு ஒருசில நாடுகளுக்கு செல்லத்தடை
நாட்டின் இறையாண்மை,சுயாதீனம் அரசியலமைப்பினால் உறுதிப்படுத்தபட்டுள்ளது. இலங்கையின் உள்ளக விவகாரத்தி;ல் சர்வதேசம் தொடர்ந்து தலையிடுகிறது.
இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட பிரேரணைகளுக்கு அமைவாக 58 இராணுவத்தினருக்கு ஒருசில நாடுகளுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கையானது ரோம் உடன்படிக்கையில் ஒருபோதும் கைச்சாத்திட கூடாது.அவ்வாறு கைச்சாத்திட்டால் இராணுவத்தினர் பல நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் கலாநிதி பிரதீபா மஹாநாம ஹேவா தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் பலஸ்தீனம் பற்றி தற்போது அதிகளவில் பேசப்படுகிறது. இலங்கை உட்பட பெரும்பாலான நாடுகள் பலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிப்பதற்கு முன்வந்துள்ளன.ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உரையாற்றும் போது பெரும்பாலான நாடுகள் சபையில் இருந்து வெளியேறியமை சிறந்த இலட்சினமாகும். பலஸ்தீனத்தை ஒரு நாடாக உலக நாடுகள் அங்கீகரிக்க வேண்டும்.
ஒரு நாடு பற்றி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு தீர்மானம் எடுக்க முடியாது.இலங்கையானது சர்வதேச நாணய நிதியம் உட்பட வெளிநாட்டு நிதி நிறுவனங்களை மாத்திரம் தஞ்சமடைந்திருந்தால் என்றோ ஒருநாள் இலங்கையின் மக்களாணையையும் விட்டுக்கொடுக்க நேரிடும்.
நாட்டின் இறையாண்மை,சுயாதீனம் அரசியலமைப்பினால் உறுதிப்படுத்தபட்டுள்ளது. இலங்கையின் உள்ளக விவகாரத்தி;ல் சர்வதேசம் தொடர்ந்து தலையிடுகிறது.சுதந்திரத்துக்கு பின்னர் ஆட்சியில் இருந்த எந்த அரச தலைவர்களும் சர்வதேச விசாரணைக்கு இணக்கம் தெரிவிக்கவில்லை.
இலங்கை இராணுவத்துக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.இலங்கைக்கு எதிராக ஐரோப்பிய நாடுகள் பல பிரேரணைகளை கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளன.
இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட பிரேரணைகளுக்கு அமைவாக 58 இராணுவத்தினருக்கு ஒருசில நாடுகளுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கையானது ரோம் உடன்படிக்கையில் ஒருபோதும் கைச்சாத்திட கூடாது.அவ்வாறு கைச்சாத்திட்டால் இராணுவத்தினர் பல நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும் என்றார்.





