புதிய உலகளாவிய பிரச்சாரத்துடன் 2025 ஆம் ஆண்டில் மூன்று மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க சிறிலங்கா திட்டம்
செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் இருந்து, சிறிலங்கா சுற்றுலா அதிகாரிகள் முக்கிய மூல சந்தைகளை உள்ளடக்கிய ஒரு ஊக்குவிப்பு பிரச்சாரத்தை தொடங்குவார்கள் என்று பெரேரா வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
2025 ஆம் ஆண்டில் 30 இலட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை எதிர்பார்ப்பதாகச் சிறிலங்கா சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் நளின் பெரேரா தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் இருந்து, சிறிலங்கா சுற்றுலா அதிகாரிகள் முக்கிய மூல சந்தைகளை உள்ளடக்கிய ஒரு ஊக்குவிப்பு பிரச்சாரத்தை தொடங்குவார்கள் என்று பெரேரா வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
பிரச்சாரத்தின் முதல் கட்டம் சீனா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இந்தியாவை குறிவைக்கும் என்றும், இரண்டாம் கட்ட பிரச்சாரம் ரஷ்யா, ஆஸ்திரேலியா, ஜப்பான், தென் கொரியா, போலந்து, இத்தாலி மற்றும் ஸ்காண்டிநேவியா, மத்திய கிழக்கு மற்றும் பெனிலக்ஸ் நாடுகளை குறிவைக்கும் என்றும் அவர் கூறினார்.
இந்த பிரச்சாரங்கள் அடுத்த ஆண்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையை 700,000 ஆல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகஸ்ட் 12 ஆம் திகதி 1.2 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் சிறிலங்காவுக்கு வருகை தந்துள்ளதாகவும், எதிர்வரும் மாதங்களில், குறிப்பாக ஒக்டோபர் முதல் டிசம்பர் வரை மேலும் 1.1 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் சிறிலங்காவுக்கு வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 2024 ஆம் ஆண்டில் 2.3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க சிறிலங்கா எதிர்பார்க்கிறது.





