புதன்கிழமைகளில் வழங்கப்பட்டிருந்த விசேட விடுமுறை நாளை முதல் ரத்து
அனைத்து அரச நிறுவனங்கள், பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் எதிர்வரும் இன்று புதன்கிழமை முதல் வழமை போல் இயங்கும் என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்தார்.
அரச நிறுவனங்கள், பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்டவற்றுக்கு புதன்கிழமைகளில் வழங்கப்பட்டிருந்த விசேட விடுமுறை நாளை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ரத்து செய்யப்படுவதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி அறிவித்துள்ளார்.
நாட்டில் நிலவிய தேசிய தேவைகளைக் கருத்திற்கொண்டு முன்னெடுக்கப்பட்ட தற்காலிக நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே இதற்கு முன்னர் இந்த புதன்கிழமை விடுமுறை அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.
அனைத்து அரச நிறுவனங்கள், பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் எதிர்வரும் இன்று புதன்கிழமை முதல் வழமை போல் இயங்கும் என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்தார்.
அதற்கமைய, அரச துறை ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் கல்விப் பணியாளர்கள் அந்தத் திகதியிலிருந்து வழக்கமான வாராந்த அட்டவணையின்படி கடமைகளுக்கும் கல்வி நடவடிக்கைகளுக்கும் சமூகமளிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த விசேட விடுமுறை இரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சேவைகளும் கல்வி நடவடிக்கைகளும் தடையின்றி வழமை போல் முன்னெடுக்கப்படுவதை உறுதி செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மேலதிக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.





