மாலே அருகே இந்தியர்களுக்கும், மாலத்தீவு மக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இருவர் காயம்
பூங்காவிற்குள் மாலத்தீவு மக்களுக்கும் இந்தியர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும், மேலதிக விசாரணைகள் நடந்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்

மாலே அருகே மாலத்தீவு மக்களுக்கும் இந்தியர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இருவர் காயமடைந்தனர்.
மாலேயில் இருந்து வடகிழக்கே 7 கி.மீ தொலைவில் உள்ள ஹுல்ஹுமலேவில் உள்ள சென்ட்ரல் பார்க் அருகே திங்கள்கிழமை இரவு 9:00 மணியளவில் இரு குழுக்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டது.
மாலத்தீவு நாட்டைச் சேர்ந்த ஒருவர் காவல்துறையினாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அதாது செய்தி இணையதளம் தெரிவித்துள்ளது. ஆனால், காயமடைந்தவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற விவரத்தைக் காவல்துறையினர் வெளியிடவில்லை.
பூங்காவிற்குள் மாலத்தீவு மக்களுக்கும் இந்தியர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும், மேலதிக விசாரணைகள் நடந்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்
படுகாயமடைந்த இருவர் ஹுல்ஹுமலே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பின்னர் சிகிச்சைக்கு பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.