Breaking News
சதுரங்கம்: இளம் வயதில் உலகச் சாம்பியன் ஆனார் டி குகேஷ்
விஸ்வநாதன் ஆனந்துக்குப் பிறகு கிளாசிக்கல் சதுரங்க உலகச் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையையும் குகேஷ் பெற்றார்.
சிங்கப்பூரில் வியாழக்கிழமை நடைபெற்ற உலக சதுரங்கச் சாம்பியன்ஷிப் போட்டியின் தீர்க்கமான 14 வது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் டிங் லிரெனை தோற்கடித்த இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ் டோம்மராஜு இளம் உலகச் சாம்பியன் என்ற வரலாற்றை உருவாக்கினார்.
18 வயதில், விஸ்வநாதன் ஆனந்துக்குப் பிறகு கிளாசிக்கல் சதுரங்க உலகச் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையையும் குகேஷ் பெற்றார்.
1985 ஆம் ஆண்டில் தனது 22 வயதில் இளம் வயதில் உலக சதுரங்க சாம்பியன் ஆன ரஷ்ய ஜாம்பவான் கேரி காஸ்பரோவின் முந்தைய சாதனையை குகேஷ் முறியடித்தார்.





