பாகிஸ்தானுக்கு இராணுவத் தளவாடங்களுடன் சரக்கு விமானம் அனுப்பப்பட்டதாக வெளியான தகவலுக்கு சீனா மறுப்பு
மக்கள் விடுதலை இராணுவ விமானப்படை (பி.எல்.ஏ.எஃப்) தனது சியான் ஒய் -20 இராணுவ போக்குவரத்து விமானம் பாகிஸ்தானுக்குப் பொருட்களை எடுத்துச் சென்றதாகக் கூறப்படுவதை மறுத்துள்ளது.
சீன இராணுவம் திங்களன்று தனது மிகப்பெரிய இராணுவ சரக்கு விமானம் பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை கொண்டு சென்றதாக வெளியான செய்திகளை மறுத்ததுடன், அத்தகைய வதந்திகளை பரப்புபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.
மக்கள் விடுதலை இராணுவ விமானப்படை (பி.எல்.ஏ.எஃப்) தனது சியான் ஒய் -20 இராணுவ போக்குவரத்து விமானம் பாகிஸ்தானுக்குப் பொருட்களை எடுத்துச் சென்றதாகக் கூறப்படுவதை மறுத்துள்ளது.
"ஒய் -20 பாகிஸ்தானுக்கு நிவாரணப் பொருட்களை கொண்டு செல்வது" குறித்து இணையத்தில் ஏராளமான தகவல்களைப் பார்த்த பின்னர், விமானப்படை ஒரு அறிக்கையில் அத்தகைய கூற்றுக்கள் பொய்யானவை என்று கூறியதாகச் சீன பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் திங்களன்று ஒரு அறிக்கை தெரிவித்துள்ளது.
"இணையம் சட்டத்திற்கு அப்பாற்பட்டது அல்ல! ராணுவம் தொடர்பான வதந்திகளை வெளியிட்டு பரப்புபவர்கள் சட்டப்படி பொறுப்பேற்க வேண்டும்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.