65 சதவீத மக்கள் ஆதரவு இருந்தால் தேர்தலை நடத்த உடன் நடத்துக்கள்: எதிர்க்கட்சித் தலைவர்
பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் குறித்து அக்கறை காட்டும் அரசாங்கத்திடம் , 750000 ஓய்வு பெற்றவர்களின் ஊதியங்கள் தொடர்பான நிலைப்பாடு தெளிவற்றதாக உள்ளது .
அரசாங்கத்துக்கு 65 சத வீத மக்கள் ஆதரவு இருப்பதாக கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதென்றால், அரசாங்கம் மாகாணசபை தேர்தலை நடத்த ஏன் பின்வாங்க வேண்டும். முடிந்தால் மாகாணசபை தேர்தலை நடத்துங்களென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 17-02-2026 அன்று இடம் பெற்ற பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இ்வ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், பாராளுமன்றத் தேர்தலுக்கு பின்னர் உள்ளூராட்சிசபைகளுக்கான தேர்தலில் இந்த அரசாங்கத்திற்கு 23 இலட்சம் வாக்குகள் குறைந்ததன. இதனால்தான் மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்தாதுள்ளது .குழுக்கள், தெரிவுக் குழுக்கள் என்று பல்வேறு தந்திரங்களை பயன்படுத்தி தேர்தல் முறையை மாற்றுவதாக கூறி, மாகாண சபை தேர்தலை தாமதப்படுத்துகின்றது
கருத்துக் கணிப்பில் அதிக சதவீத ஆதரவு கிடைத்ததால் அரசாங்கம் மகிழ்ச்சியில் திளைக்கிறது.கருத்துக் கணிப்பின்படி அரசாங்கத்திற்கு 65வீத மக்கள் ஆதரவு இருக்கிறது என்றால், கூட்டுறவு சங்க வாக்குகளை கருத்திற் கொள்வதில்லை என்றால் மாகாண சபை தேர்தலை நடத்துங்கள்.அரசாங்கத்திற்கு இவ்வளவு மக்கள் செல்வாக்கு இருப்பது உண்மை என்றால் , குழுக்கள், தெரிவுக் குழுக்கள் என்று பல்வேறு தந்திரங்களை பயன்படுத்தி இழுத்தடிக்காமல் மாகாண சபை தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்திற்கு சவால் விடுக்கின்றேன்.
இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்க வேண்டும் . அந்த நிலைப்பாட்டில் தொடர்ந்தும் இருக்கிறேன். அதை நேரடியாகவே தெரிவிக்கின்றேன். உலகின் ஜனநாயக நாடுகளில் மக்கள் பிரதிநிதிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுவது ஊழல் மற்றும் இலஞ்சத்தை குறைத்து அதனை இல்லாதொழிக்க வேண்டும் என்ற அடிப்படையிலாகும். இவர்களினது பதவிக்காலம் முடிந்த பின்பு இவர்களுக்கு ஒருவகையில் சமூக பாதுகாப்பை பெற்றுக் கொடுப்பதும் இதில் ஒரு அம்சம் . இந்த நிலைப்பாட்டில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி உறுதியாக இருக்கிறது
பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் குறித்து அக்கறை காட்டும் அரசாங்கத்திடம் , 750000 ஓய்வு பெற்றவர்களின் ஊதியங்கள் தொடர்பான நிலைப்பாடு தெளிவற்றதாக உள்ளது . பி.சி. பெரேரா குழுவின் பரிந்துரைப்படி அரச ஊழியர்களுக்கு 60வீதம் சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டதில் ஆசிரியர், அதிபர், ஆலோசகர் சேவைகளுக்கு அது வழங்கப்படாமல் பெரும் ஏற்றத்தாழ்வு காணப்படுகின்றது. சுபோதனி குழுவின் 20வீத அதிகரிப்பு 2022 ஜனவரி 1ஆம் திகதியிலிருந்து பணியில் உள்ளவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டதால், ஓய்வு பெற்றவர்களுக்கு எந்த நிவாரணமும் இல்லாத நிலையும் உள்ளது . ஜனாதிபதி ஓய்வூதியர்கள் தேசிய மாநாட்டில் இந்த பிரச்சினைகளை தீர்த்துத் தருவேன் என்று கூறியும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
2025-2027 சம்பள அதிகரிப்பு செய்தாலும், 2020-2024 காலத்தில் ஓய்வு பெற்ற 154000பேருக்கு எந்த நிவாரணமும் இல்லை. 2025 ஏப்ரல் 1-க்கு முன் அதாவது, ஜனவரி, மார்ச் மாதங்களில் ஓய்வு பெற்றவர்களுக்கு சலுகைகள் கிடைத்தாலும், 2020-2024 காலத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கு சரிசெய்யப்படாமல் போனதால் அவர்கள் கஷ்டத்தில் உள்ளனர் . 10,000 ரூபா சம்பள அதிகரிப்பை ஓய்வூதியத்தில் இணைக்கும் செயல்முறையை கோத்தபாய அரசாங்கம் இரத்துச் செய்த பிறகு, இந்த அநீதியை சரிசெய்ய 3 ஆண்டுகள் ஆகியும் நடவடிக்கை இல்லாமல் பல ஓய்வூதியர்கள் கடும் சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர்
15 இலட்சம் சிரேஷ்ட பிரஜைகள் சமூகத்தின் சேமிப்புகளுக்கு வழங்கப்பட்ட 15வீத வட்டியை ஏன் நீக்கினீர்கள்?. அந்த வட்டி இன்றுவரை வழங்கப்படவில்லை. மின்சார கட்டணம் இன்னும் குறைக்கப்படவில்லை. 33வீதத்தால் மின்சார கட்டணத்தை குறைப்போம் என்று கூறியும் அது நிறைவேறவில்லை. போதாகுறைக்கு இரண்டாம் காலாண்டில் 13.56 வீதத்தால் மின்சார கட்டணத்தை அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது. மேலும், காலி பூஸா சிறைச்சாலையில் இருக்கும் காயமடைந்த இராணுவ வீரர்களை பனாகொடவிற்கு அனுப்ப முயற்சித்து வருகின்றது. இதுதான் இந்த மக்கள் மீது உணர்வுமிக்க அரசாங்கம் செய்யும் செயல்கள் என்றார்.





