நாட்டுக்கு வருகை தரவுள்ள இந்திய வெளிவிவகார உயர்மட்டப் பிரதிநிதி
பொது இணக்கப்பாடு எட்டப்படும் விடயங்களில் தமிழ்பேசும் மக்களின் நலனை முன்னிறுத்தி ஆக்கபூர்வமான முறையில் இணைந்து செயற்படுவதற்கு உடன்பட்டிருந்தன.
இந்திய வெளிவிவகார உயர்மட்டப் பிரதிநிதியொருவர் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு எதிர்வரும் வாரம் நாட்டுக்கு வருகைதரவுள்ளார்.
இவ்விஜயத்தின்போது அவர் அரசாங்கத்தின் உயர்மட்டப் பிரதிநிதிகள், எதிர்க்கட்சித்தலைவர், தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், மலையக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளடங்கலாக பல்வேறு தரப்பினருடன் சந்திப்புக்களை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது இவ்வாறிருக்க இலங்கை தமிழ் அரசுக் கட்சி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகிய 6 தமிழ் பேசும் அரசியல் கட்சிகளும் தமது சுயாதீனத்துவத்தையும் கொள்கைகளையும் அரசியல் நிலைப்பாடுகளையும் பெணிக்கொண்டு, பொது இணக்கப்பாடு எட்டப்படும் விடயங்களில் தமிழ்பேசும் மக்களின் நலனை முன்னிறுத்தி ஆக்கபூர்வமான முறையில் இணைந்து செயற்படுவதற்கு உடன்பட்டிருந்தன.
இந்நிலையில் மேற்படி 6 கட்சிகளின் பிரதிநிதிகளும் நாட்டுக்கு வருகைதரவுள்ள இந்திய உயர்மட்டப் பிரதிநிதியைக் கூட்டாகச் சந்தித்துக் கலந்துரையாடுவர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.





