இலங்கையுடன் வர்த்தக ஒத்துழைப்பை மேம்படுத்த முயற்சி
வர்த்தக வசதிகளை விரிவுபடுத்துதல், முதலீட்டு வாய்ப்பு, காப்புறுதி கூட்டாண்மை மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைசார் ஒத்துழைப்புக்கள் தொடர்பில் இச்சந்திப்பின்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
நிலையான பொருளாதார வளர்ச்சி மற்றும் சுபீட்சத்தை ஊக்குவிக்கும் வகையில் பாகிஸ்தான், ருமேனியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை பலப்படுத்துவதை முன்னிறுத்தி பாகிஸ்தான் - ருமேனியா வர்த்தக சம்மேளனம் அர்ப்பணிப்புடன் செயற்படும் என அவ்வமைப்பின் ஆலோசகர் ஆத்திப் ஃபாரூக் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் - ருமேனியா வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் சொஹைல் ஷமீம் ஃபிர்போ மற்றும் ஆலோசகர் ஆத்திப் ஃபாரூக் ஆகியோருக்கும் கராச்சியில் உள்ள இலங்கையின் கொன்சியூலர் நாயகம் பி.கே.சஞ்சீவ பட்டிவிலவுக்கும் இடையிலான சந்திப்பு சில தினங்களுக்கு முன்னர் பாகிஸ்தான் - ருமேனியா வர்த்தக சம்மேளன தலைமையகத்தில் நடைபெற்றது.
பாகிஸ்தான், ருமேனியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையிலான முத்தரப்பு வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்டுவரும் தொடர் முயற்சிகளின் நீட்சியாக இந்த சந்திப்பு அமைந்தது.
வர்த்தக வசதிகளை விரிவுபடுத்துதல், முதலீட்டு வாய்ப்பு, காப்புறுதி கூட்டாண்மை மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைசார் ஒத்துழைப்புக்கள் தொடர்பில் இச்சந்திப்பின்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இச்சந்திப்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஆத்திப் ஃபாரூக், 'பிராந்திய பொருளாதார ஒருங்கிணைப்பு தொடர்பில் இலங்கை கொன்சியூலர் நாயகம் வெளிப்படுத்திய அர்ப்பணிப்புடன்கூடிய கடப்பாட்டை நாம் பெரிதும் வரவேற்கிறோம். நிலையான வளர்ச்சி மற்றும் சுபீட்சத்தை ஊக்குவிக்கும் வகையில் பாகிஸ்தான், ருமேனியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை பலப்படுத்துவதை முன்னிறுத்தி பாகிஸ்தான் - ருமேனியா வர்த்தக சம்மேளனம் அர்ப்பணிப்புடன் செயற்படும்' எனத் தெரிவித்துள்ளார்.





