செம்மணி புதைகுழி தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு விசேட அறிவிப்பு
மனிதப்புதைகுழி அகழ்வு உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடும் அரச அதிகாரிகள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு எதிரான எவ்வித ஒடுக்குமுறைகளையும் பிரயோகிக்கவேண்டாம் என குற்ற விசாரணைப்பிரிவினருக்கு பொலிஸ்மா அதிபர் அறிவுறுத்தவேண்டும்.
செம்மணி மனிதப்புதைகுழி அமைந்துள்ள பகுதியை சுற்றியுள்ள பகுதிகளில் மனித எச்சங்கள் உள்ளனவா என்பதைக் கண்டறிவதற்கு ஏதுவாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திடமிருந்து ஜி.பி.ஆர் ஸ்கேன் வசதியைப் பெற்றுக்கொடுத்தல், டி.என்.ஏ வங்கியை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுத்தல், அரச அதிகாரிகளால் நிகழ்த்தப்பட்ட குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளுக்கான நிரந்தர சுயாதீன அலுவலகத்தை ஸ்தாபித்தல் ஆகிய பரிந்துரைககளை நடைமுறைப்படுத்துவதற்கு நீதியமைச்சர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மனிதப்புதைகுழி அகழ்வு உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடும் அரச அதிகாரிகள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு எதிரான எவ்வித ஒடுக்குமுறைகளையும் பிரயோகிக்கவேண்டாம் என குற்ற விசாரணைப்பிரிவினருக்கு பொலிஸ்மா அதிபர் அறிவுறுத்தவேண்டும். அதேபோன்று செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பான விசாரணை செயன்முறைகளில் இராணுவ அதிகாரிகள் எவ்வித தலையீட்டையும் மேற்கொள்ளக்கூடாது என பாதுகாப்பு அமைச்சரும், இராணுவத்தளபதியும் தெளிவாக உத்தரவிடவேண்டும் என ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.





