அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு கோரிக்கை விடுக்க ஜனாதிபதி முடிவு
ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் குறித்து தீவிர கவனம் செலுத்திய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறும், தொடர்ச்சியான கலந்துரையாடலில் ஈடுபடுமாறும் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
சிவராசா அனோஜன் தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத்தில் எடுக்கக்கூடிய இராஜதந்திர மற்றும் சட்டரீதியான நடவடிக்கைகள் மற்றும் இந்த சம்பவம் தொடர்பாக சவூதி அரேபிய அதிகாரிகளுடன் நடைபெற்று வரும் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் குறித்து தீவிர கவனம் செலுத்திய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறும், தொடர்ச்சியான கலந்துரையாடலில் ஈடுபடுமாறும் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞரான சிவராசா அனோஜன் தொடர்பாக எடுக்கக்கூடிய எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக, 21-09-2026 அன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.
சிவராசா அனோஜன் தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத்தில் எடுக்கக்கூடிய இராஜதந்திர மற்றும் சட்டரீதியான நடவடிக்கைகள் குறித்தும் மேலும் கலந்துரையாடியதுடன், இந்த சம்பவம் தொடர்பாக சவூதி அரேபிய அதிகாரிகளுடன் நடைபெற்று வரும் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி ஆராய்ந்தார்.





