ஜனாதிபதியின் தலைமைத்துவத்தில் செயற்படுவதையிட்டு மிகவும் பெருமையடைகிறேன் - பிரதமர் ஹரிணி
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு 'பெண்கள் நாம் ஓர் அணியில் - அவள் உயரும்போது, உயரும் நாடு' எனும் தொனிப்பொருளின் கீழ் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமைத்துவத்தில் செயற்படுவதையிட்டு நான் மிகவும் பெருமையடைகிறேன். ஜனாதிபதியின் அரசியல் திறன், மனிதாபிமான பண்பினை இன்று முழு உலகும் பாராட்டுகிறது. இது நாட்டுக்கு கிடைத்த பெருமையாகும். இந்த நாட்டின் பெண்கள் ஜனாதிபதியை தன் மகனாகவும், சகோதரராகவும் பார்க்கிறார்கள் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு 'பெண்கள் நாம் ஓர் அணியில் - அவள் உயரும்போது, உயரும் நாடு' எனும் தொனிப்பொருளின் கீழ் 08-03-2026 அன்று கொழும்பு பி.டி. சிறிசேன விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது: பெண்கள் எந்தத் துறையைச் சார்ந்தவர்களாக இருந்தபோதிலும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்காக நாம் முன்னிற்போம். அதற்காகவே நாம் அரசியலில் ஈடுபடுகின்றோம். இன்று அனைத்துத் துறைகளிலும் பெண்கள் முன்னோக்கி வந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களின் அந்த அர்ப்பணிப்புக்கு உரிய மதிப்பினை வழங்க அரசாங்கம் தயாராக உள்ளது. இந்நாட்டைத் கட்டியெழுப்பும் பணியில் பெண்களாகிய உங்களின் பங்களிப்பு எமக்கு மிகவும் பெறுமதிமிக்கதாகும்.
இலங்கைப் பெண்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துத் துறைகளுக்காகவும் தானும் தனது குழுவினரும் அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயம் முதல் சகல துறைகளிலும் பெண்கள் இன்று சாதித்து வருகிறார்கள். பெண்களுக்காகவே நாங்கள் அரசியலில் ஈடுபடுகிறோம். வேறு ஒரு தலைமையையோ அல்லது வேறு ஒரு இயக்கத்தையோ முன்னிலைப்படுத்துவதற்காகத் தாம் அரசியலில் ஈடுபடவில்லை.
இந்த நாட்டில் உள்ள அனைத்துப் பெண் பிள்ளைகளுக்கும்,அனைத்துப் பெண்களுக்கும் முன்மாதிரியாகப் பெண்கள் எவ்வாறு அரசியல் செய்ய வேண்டும் என்பது குறித்து நாளுக்கு நாள் கட்டியெழுப்பப்படும் ஒரு இயக்கமே இது. அதையிட்டு நாம் பெருமையடைகிறோம்.
பெண்கள் அரசியலில் நாம் அனைவரையும் ஒன்றிணைத்துச் செல்வதுடன், இந்நாட்டின் பெண்கள் எந்தத் துறையில் எங்கே இருக்கிறார்களோ, அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவே நாம் அரசியல் செய்கிறோம். வேறு ஒரு தலைமையையோ அல்லது வேறு ஒரு இயக்கத்தையோ முன்னுக்குக் கொண்டு வருவதற்காக நாம் இங்கே எதனையும் செய்யவில்லை. எமது பெண்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், அவற்றை முறையாகப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்குமே நாம் இந்த அரசியலைச் செய்கிறோம்.
மலையக சமூகத்தின் பெண்கள் இன்றும் எம்முடன் உள்ளார்கள். ஜனாதிபதி அண்மையில் நுவரெலியாவுக்கு சென்ற போது பெண்கள் ஜனாதிபதியுடன் இயல்பாக உரையாடினார்கள். கரத்தை பற்றி தமக்கு சமமாக நிற்க வைத்தார்கள். நாங்கள் இந்த நாட்டில் அனைத்து பெண்களுக்கும் சம அந்தஸ்த்தை கொடுத்துள்ளோம்.
பெருந்தோட்ட மக்களின் சம்பள பிரச்சினை பற்றி காலம் காலமாக பேசப்பட்டது, ஆனால் நாங்கள் எவரும் எதிர்பார்க்காத வகையில் சம்பள பிரச்சினைக்கு தீர்வு வழங்கினோம். இந்த சம்பள உயர்வு மலையக சமூகத்தின் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமைத்துவத்தில் செயற்படுவதையிட்டு நான் மிகவும் பெருமையடைகிறேன். ஜனாதிபதியின் அரசியல் திறன், மனிதாபிமான பண்பினை இன்று முழு உலகும் பாராட்டுகிறது. இது நாட்டுக்கு கிடைத்த பெருமையாகும்.
2024 ஆம் ஆண்டு ஏற்பட்ட பாரியதொரு அரசியல் மாற்றத்தில் பிரதான பங்காளிகளாக பெண்கள் உள்ளார்கள்.எமது பயணம் முடிவடையவில்லை. பொருளாதார மீட்சிக்குரிய திட்டங்களை சிறந்த முறையில் அமல்படுத்தி வருகிறோம். பெண்கள் குடும்பத்தின் பிரதான அங்கமாக உள்ளார்கள். ஆகவே பெண்கள் சகல துறைகளிலும் முன்னேற்றமடைந்தால் குடும்படுமும், சமூகமும் மேன்மைபெறும் என்றார்.





