அடுத்த பிரதம நீதியரசராக பத்மன் சூரசேன
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அரசியலமைப்பு பேரவைக்கு உயர்நீதிமன்ற நீதிபதி பிரீதி பத்மன் சூரசேனவின் பெயரை பரிந்துரைத்திருந்தார்.

அடுத்த பிரதம நீதியரசர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்த உயர்நீதிமன்ற நீதிபதி பிரீதி பத்மன் சூரசேனவை அரசியலமைப்பு பேரவை ஏகனமதாக அங்கீகரித்துள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அரசியலமைப்பு பேரவைக்கு உயர்நீதிமன்ற நீதிபதி பிரீதி பத்மன் சூரசேனவின் பெயரை பரிந்துரைத்திருந்தார்.
இந்நிலையில் 23-07-2025அன்று சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் அரசியலமைப்பு பேரவை கூடியது.
இக்கூட்டத்தின் முதல்விடயமாக அடுத்த பிரதம நீதியரசர் பதவிக்கான வெற்றிடத்தினை நிரப்புகின்ற விடயம் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, ஜனாதிபதியின் பரிந்துரை வெளிப்படுத்தப்பட்ட நிலையில் அதனை அரசியலமைப்பு பேரவையின் அங்கத்தவர்கள் ஏகமனதாக அங்கீகரித்தார்கள்.
உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழாமில் சிரஷ்டத்துவம் மிக்கவரான நீதிபதி பிரீதி பத்மன் சூரசேன, முன்னர் நீதிச்சேவை ஆணைக்குழுவின் உறுப்பினராகவும் செயற்பட்டிருந்தார்.
அத்துடன், அவரது தொழில்வாண்மைக் காலத்தில் பல உயர்மட்ட வழக்குகளுக்கும் தலைமை தாங்கியுள்ளதோடு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் பாராளுமன்றக் குழுவின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
இதேநேரம் தற்போது பதவியில் உள்ள பிரதம நீதியரசர் முர்து பெர்னாண்டோ இம்மாதம் 27ஆம் திகதி பதவியிலிருந்து ஓய்வு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.