நயினாதீவு நாக விகாரை விகாராதிபதிக்கு காணி உரிமையாளர்கள் மகஜர்
ஜனாதிபதி பதவியேற்று ஒன்றரை வருடங்களுக்கு மேலாகியும் காணியில் ஒரு சிறு துண்டேனும் விடுவிக்கப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்கள்.
திஸ்ஸ விகாரையை அகற்கு தமக்குச் சொந்தமான காணிகளை மீண்டும் தம்மிடத்தே கையளிக்குமாறு காணி உரிமையாளர்கள் நயினாதீவு நாக விகாரை விகாராதிபதி நவதலகல பத்ம தேரரிடத்தில் காணி உரிமையாளர்கள் மகஜர் கையளித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.
தையிட்டி விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ளதன் காரணமாக தமது பூர்வீகக் காணிகளை இழந்தவர்கள் நயினாதீவு நாக விகாரை விஹாரதிபதியை நேற்றைதினம் நேரில் சந்தித்து கலந்ஐரயாடினார்கள்.
குறிப்பாக, யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் தனியார் காணிகளை அடாத்தாக கையகப்படுத்தி இராணுவத்தினரால் திஸ்ஸ விகாரை கட்டப்பட்டுள்ளது.
குறித்த விகாரையை அகற்றி, அந்த காணிகளை தம்மிடம் ஒப்படைக்குமாறு, காணி உரிமையாளர்களாகிய நாங்கள் நீண்ட காலமாக போராட்டம் நடத்தி வருகின்றோம் என்பதையும் அவர் தேரரிடத்தில் எடுத்துரைத்தனர்.
ஜனாதிபதி அநுரகுமார திஸ்ஸ நாயக்க ஜனாதிபதியாக பதவியேற்றதும் 'மக்களின் காணி மக்களுக்கே' என்று கூறியதுடன், திஸ்ஸ விகாரைக்காக அடாத்தாக கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவிப்பதாக உறுதி அளித்திருந்தார். ஜனாதிபதி பதவியேற்று ஒன்றரை வருடங்களுக்கு மேலாகியும் காணியில் ஒரு சிறு துண்டேனும் விடுவிக்கப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்கள்.
இந்நிலையில் நயினாதீவு நாக தீப விகாராதிபதி, தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி தனியார்களுடையதாகும். அந்த காணியினை அவர்களிடமே மீளவும் அளிப்பதே அறமாகும் என்று மீண்டும் தெரிவித்ததோடு அந்த நிலைப்பாட்டை தான் பகிரங்கமாக வெளியிட்டமையையும் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து அவரிடத்தில் குறித்த காணி விபரங்கள் மற்றும் உரியமையாளர்களின் விபரங்கள் உள்ளிட்ட மகஜர் கையளிக்கப்பட்டது. அப்போது உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தான் முயற்சிகளை எடுப்பதாக தேரர் குறிப்பிட்டுள்ளார்.





