'அமைதிக்கான நடைப்பயணம்’ சுதந்திர சதுக்கத்தில் நிறைவு
அரச அணுசரனையுடன் நேற்று பிற்பகல் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அமைச்சர்கள் மற்றும் சர்வமத தலைவர்கள் உட்பட பெருந்திரளான மக்கள் கலந்துக் கொண்டார்கள்.
அமெரிக்காவை தளமாகக் கொண்ட வியட்நாமிய பௌத்த துறவியான பஞ்ஞாகர தேரர் இலங்கையில் தம்புள்ளையில் ஆரம்பித்த 'அமைதிக்கான நடைப்பயணம்' 28-04-2026 அன்று கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நிறைவடைந்தது.
பஞ்ஞாகர தேரருக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இலங்கையின் பௌத்த மத வருகையை பறைசாற்றும் புனித வெள்ளரசு மரக்கிளயை கௌரவபூர்வமாக கையளித்தார். அதேபோல் ஜெய ஸ்ரீ மகா போதியின் தூபி சிலையையும் ஜனாதிபதி கையளித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார். பஞ்ஞாகர தேரர் ஜனாதிபதிக்கு புத்தர் சிலை ஒன்றை கையளித்து ஆசி வழங்கினார்.
அமெரிக்காவில் டெக்சாஸ் முதல் வாஷிங்டன் டி.சி வரை சுமார் 3,700 கி.மீ தூரத்தை நடைப்பயணமாகக் கடந்த பன்னாகார தேரர், கடந்த ஏப்ரல் 21 அன்று விழிப்புணர்வு மற்றும் நல்லிணக்கச் செய்தியை இலங்கைக்குக் கொண்டு வரும் நோக்கில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.
இந்த 'அமைதிக்கான நடைப்பயணம்' தம்புள்ளையில் ஆரம்பிக்கப்பட்டு, நேற்று கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நிறைவடைந்தது. இந்தத் தூதுக்குழுவினர் அனுராதபுரம் ஜய ஸ்ரீ மகா போதியிலிருந்து பெறப்பட்ட புனித போதிக் கன்று மற்றும் புனித புத்தர் தாதுப்பொருட்களை ஏந்திச் சென்றனர்.
.
அமெரிக்கா முழுவதிலும் இவருடன் நடைப்பயணம் மேற்கொண்ட 'ஆலோகா' எனும் மீட்கப்பட்ட தெரு நாய், இந்த பயணத்திலும் துறவியுடன் இணைந்துள்ளது. இந்த நடைப்பயணத்தின் போது ஆலோகா, ஒழுக்கம் மற்றும் கருணையின் அடையாளமாக மாறி பொதுமக்களினதும் ஊடகங்களினதும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
அரச அணுசரனையுடன் நேற்று பிற்பகல் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அமைச்சர்கள் மற்றும் சர்வமத தலைவர்கள் உட்பட பெருந்திரளான மக்கள் கலந்துக் கொண்டார்கள்.
இந்நிகழ்வின் போது பஞ்ஞாகர தேரருக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இலங்கையின் பௌத்த மத வருகையை பறைசாற்றும் புனித வெள்ளரசு மரக்கிளயை கௌரவபூர்வமாக கையளித்தார். அதேபோல் ஜெய ஸ்ரீ மகா போதியின் தூபி சிலையையும் ஜனாதிபதி கையளித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார். பஞ்ஞாகர தேரர் ஜனாதிபதிக்கு புத்தர் சிலை ஒன்றை கையளித்து ஆசி வழங்கினார்.





