யோஷிசித்த, டெய்சி பாட்டி வழக்கு 28இல் விசாரணை
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித்த ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்சி பொரெஸ்ட் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரால் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

யோஷித்த ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்சி பொரெஸ்ட் ஆகியோருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் 28 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித்த ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்சி பொரெஸ்ட் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரால் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்றைய தினம் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, யோஷித்த ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்சி பொரெஸ்ட் ஆகியோர் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வரும் நீதிபதி விடுமுறையில் உள்ளதால் இந்த வழக்கு எதிர்வரும் 28 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.