செம்மணியில் ஏ-9 வீதியை அண்மித்தும் சடலங்கள் இருக்கலாம்; யாழ்.சட்டத்தரணிகள் சங்கம்
தொல்பொருள் தடயவியல் பேராசிரியர் ராஜ் சோமதேவவின் உதவியுடன் சட்ட மருத்துவ அதிகாரி செல்லையா பிரணவனின் நேரடி கட்டுப்பாட்டில் இந்த அகழ்வுப் பனிகள் முன்னெடுக்கப்பட்டன.

யாழ்.அரியாலை- செம்மணி - சிந்துபாத்தி மனித புதைகுழியிலிருந்து இதுவரை 37 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், தற்போது அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படும் செம்மணி - சிந்துபாத்தி மயானத்தின் 11 x 11 சதுர அடி நிலபப்ரப்புக்கு மேலதிகமாக, ஏ- 9 வீதியை அண்மித்தும் சடலங்கள் இருக்கலாமென சந்தேகிப்பதாக யாழ். சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்தது.
இந்த அகழ்வுப் பணிகளை கண்காணிக்க யாழ். சட்டத்தரணிகள் சங்கமும் நேற்று முதல் அகழ்வுப் பணி இடம்பெரும் பகுதிக்கு தனது சட்டத்தரணிகள் குழாமை அனுப்பியுள்ள நிலையில், அதனை மேற்பார்வை செய்த யாழ். சட்டத்தரணிகள் சங்கத்தின் சார்பில் சட்டத்தரணி வீ. மணிவண்ணன் இதனை தெரிவித்தார். அவசியம் ஏற்படின் மேலதிக நிலப்பரப்பின் அகழ்வு குறித்து தேவையான நடவடிக்கை எடுக்கப்படலாம் என அவர் குறிப்பிட்டார்.
செம்மணி - சித்துபாத்தி மனித புதைக் குழியின் அகழ்வுப் பணியின் 2 ஆம் கட்டத்தின் 9 ஆம் நாள் அகழ்வுப் பணிகள் நேற்று யாழ் நீதிவான் ஏ. ஆனந்த ராஜாவின் மேர்பார்வையில் நடந்தது.
இதன்போது, தொல்பொருள் தடயவியல் பேராசிரியர் ராஜ் சோமதேவவின் உதவியுடன் சட்ட மருத்துவ அதிகாரி செல்லையா பிரணவனின் நேரடி கட்டுப்பாட்டில் இந்த அகழ்வுப் பனிகள் முன்னெடுக்கப்பட்டன.
நேற்று மாலையாகும் போது மொத்தமாக 42 எலும்புக் கூடுகள் இந்த புதைக் குழி பகுதியில் அடையாலம் காணப்ப்ட்டிருந்த்த நிலையில் அதில் 37 மீட்கப்பட்டிருந்த்தன.
இந்த நிலையில் மீட்கப்பட்ட எழும்புக் கூடுகள் இருந்த்த முறைமையை அவதனைக்கும் போது மிகத் திட்டமிட்டு, சடலங்கள் புதைக்கப்பட்டிருப்பதையும், தடயங்கள், திசை கண்டறியபப்டுவதை தடுக்கும் வண்ணமும் திட்டமிடப்பட்டு இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்ப்ட்டிருப்பதை அவதனைப்பதாகவும் யாழ். சட்டத்தரனிகள் சங்கத்தின் சார்பில் ஊடகங்களிடம் பேசிய சட்டத்தரணி வீ.மணிவண்னனன் குறிப்பிட்டார்.