கிராமப்புற மக்களை சென்றடையாமல் பொருளாதார வளர்ச்சி முக்கியத்துவம் பெறாது: குடியரசுத் தலைவர்
அலரி மாளிகையில் இடம்பெற்ற "பிரஜாசக்தி" தேசிய நிகழ்ச்சித்திட்டத்தை வெள்ளியன்று (4) முற்பகல் தொடங்கி வைத்து உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
புள்ளிவிபரங்களில் பிரதிபலிக்கப்படும் பொருளாதார வளர்ச்சியின் அளவு எதுவாக இருந்தாலும், இந்த வளர்ச்சியின் நன்மைகள் கிராமியச் சமூகங்களுக்கு நீட்டிக்கப்படாவிட்டால், அத்தகைய வளர்ச்சி முக்கியத்துவமல்ல என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.
தேசியப் பொருளாதார வளர்ச்சியை அடைவது முக்கியமானதாக இருந்த அதேவேளை, கிராமியச் சமூகங்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கி அவர்களை பொருளாதாரச் செயற்பாட்டில் காத்திரமான பங்குபற்றாளர்களாக மாற்றும் வகையில் பொருளாதாரத்தை விரிவுபடுத்துவதும் அவசியமாகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். இது அரசாங்கத்தின் பொறுப்பு என்று அவர் கூறினார்.
அலரி மாளிகையில் இடம்பெற்ற "பிரஜாசக்தி" தேசிய நிகழ்ச்சித்திட்டத்தை வெள்ளியன்று (4) முற்பகல் தொடங்கி வைத்து உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.