உலக வங்கியிடமிருந்து அவசரகால ஆதரவாக 120 மில்லியன் டொலர் நிதி
ளால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள சுகாதாரப் பராமரிப்பு, நீர், கல்வி, விவசாயம் மற்றும் இணைப்பு உட்பட அத்தியாவசிய சேவைகள் மற்றும் உள்கட்டமைப்பை மீட்டெடுக்கவும், மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவவும் ஆதரவளிக்கும் என உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.
தித்வா புயலால் ஏற்பட்ட பேரிடரிலிருந்து மீள்வதற்காக அரசாங்கத்தினால் உலக வங்கியிடம் நிதி உதவிக்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. அந்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக, உலக வங்கியானது நடைமுறையில் உள்ள திட்டங்களில் இருந்து நிதியை மறுபயன்பாடு செய்வதன் மூலம் அவசரகால ஆதரவாக 120 மில்லியன் டொலரை வழங்க தீர்மானித்துள்ளது.
இது அனர்த்தங்களால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள சுகாதாரப் பராமரிப்பு, நீர், கல்வி, விவசாயம் மற்றும் இணைப்பு உட்பட அத்தியாவசிய சேவைகள் மற்றும் உள்கட்டமைப்பை மீட்டெடுக்கவும், மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவவும் ஆதரவளிக்கும் என உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.
உலக வங்கி குழுமத்தின் தனியார் துறைப் பிரிவான சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனம் , வேலைகளை உருவாக்குவதற்கும் பொருளாதார மீட்சியைத் தூண்டுவதற்கும் - விவசாயம், உற்பத்தி மற்றும் தளவாடங்கள் உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஆலோசனைக்புளை வழங்குவதன் மூலமும் மூலோபாய முதலீடுகளை வழங்குவதன் மூலமும் தனியார் துறையை தொடர்ந்து வலுப்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளது.
தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு இலங்கையர் மீதும் எமது இதயம் செல்கிறது. இந்தக் கடினமான நேரத்தில் ஒருவருக்கொருவர் ஆதரவளிக்க நாடு முழுவதும் உள்ள சமூகங்கள் ஒன்றிணைந்த விதத்தால் நாம் ஊக்குவிக்கப்படுகிறோம்' என்று உலக வங்கி குழுமத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான நாட்டு முகாமையாளர் கெவொர்க் சார்க்ஸ்யான் தெரிவித்துள்ளார்.





