ரணிலுக்கு பிணை வழங்காமை முறையற்றது:சுமந்திரன்
பாரிய குற்றங்களுக்காக அரச தலைவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். எவரும் சட்டத்திற்கு மேலானவர்கள் இல்லை.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிணை வழங்குவதை எதிர்த்தமையானது முறையற்றது என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச் செயலாளரும், பேச்சாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அரச நிதியை முறையற்ற வகையில் பயன்படுத்திமைக்காக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் தனது எக்ஸ் தளத்தில் பதிவொன்றைச் செய்துள்ள அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பாரிய குற்றங்களுக்காக அரச தலைவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். எவரும் சட்டத்திற்கு மேலானவர்கள் இல்லை. ஆனால் நீதிமன்றில் முன்வைத்த குற்றத்துக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஒரு வெள்ளிக்கிழமை கைது செய்து பிணை வழங்குவதை எதிர்த்ததென்பது, முறையான ஆலோசனை அற்றதாகவே தோன்றுகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.





