வாசு,உதய, விமல் ஆகியோரை கூட்டணியில் இணைக்கும் நாமலின் முயற்சி தோல்வி
மாகாணசபைத் தேர்தலை இலக்காகக் கொண்டு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடுவதற்கு தீர்மானித்து அதற்குரிய நகர்வுகளை முன்னெடுத்துள்ளது.
பிவிதுறு ஹெல உறுமய, சுதந்திர தேசிய முன்னணி மற்றும் இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆகிய கட்சிகளை கூட்டணி அடிப்படையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் ஒன்றிணைப்பதற்கு பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்துள்ளது.
மாகாணசபைத் தேர்தலை இலக்காகக் கொண்டு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடுவதற்கு தீர்மானித்து அதற்குரிய நகர்வுகளை முன்னெடுத்துள்ளது.
குறிப்பாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகிச் சென்ற தரப்பினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது. அதற்கமைய அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ அண்மையில் பிவிதுறு ஹெல உறுமயக் கட்சியன் தலைவர் உதய கம்மன்பில, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச ஆகியோருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.
இந்த பேச்சுவார்த்தையில் சுமுகமான வகையில் கருத்து பரிமாற்றப்பட்டுள்ளதுடன், எவ்விதமான நிபந்தனைகளும். இணக்கப்பாடுகளும் பொதுஜன பெரமுனவினால் முன்வைக்கப்படாத நிலையில் எவ்வித உறுதியான தீர்மானமும் எடுக்கப்படாத நிலையில் சந்திப்பு முடிவடைந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இடதுசாரி ஜனநாயக முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்காரவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். ' இணக்கமான முறையில் பேசலாம், நட்புறவுடன் இருக்கலாம். ஆனால் அரசியல் கூட்டணி பற்றி பேச முடியாது.அதற்கான அவசியம் தற்போது இல்லை' என்று வாசுதேவ நாணயக்கார, நாமல் ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளார்.





