செம்மணியில் 8 எலும்புக்கூட்டு தொகுதிகள் குவியலாக அடையாளம்
செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றம் 45 நாட்கள் அனுமதி வழங்கியுள்ள நிலையில், 04-09-2025 அன்று 43 ஆவது நாளாக அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்டது.
செம்மணி புதைகுழியில் குவியலாக எட்டு என்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றை சுத்தப்படும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறித்த என்புகூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டதன் பின்னரே , அவை தொடர்பிலான விபரங்களை கூற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை இரண்டு என்பு கூடுகளின் குறுக்காக காணப்பட்ட என்பு கூடும் , ஒரு என்பு கூட்டின் தோள்பட்டையுடன் தொடுகையுற்றவாறு காணப்பட்ட என்பு கூடும் இன்றைய தினம் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன் சட்டை பொத்தான்கள் சிலவும் , காசும் , கைகளில் கட்டும் சிறிய தாயத்து ஒன்றும் புதைகுழியில் இருந்து சான்று பொருட்களாக மீட்கப்பட்டுள்ளன.
இதேவேளை செம்மணி மனித புதைகுழியில் இருந்து 04-09-2025 அன்று புதிதாக 11 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 04 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது
செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் கடந்த 25ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நிலையில் 04-09-2025 அன்று 11ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது.
செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றம் 45 நாட்கள் அனுமதி வழங்கியுள்ள நிலையில், 04-09-2025 அன்று 43 ஆவது நாளாக அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்டது. அதேவேளை கட்டம் கட்டமாக இதுவரையில் 52 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகளின் போது, இன்றைய தினம் அகழ்ந்து எடுக்கப்பட்ட 11 எலும்புக்கூட்டு தொகுதியுடன் இதுவரையில் 224 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. இதுவரையில் 235 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





