இந்திய உயர்ஸ்தானிகர் - எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு
இலங்கையின் தற்போதைய சமகால அரசியல் முன்னேற்றங்கள் மற்றும் அண்மைக்கால அரசியல் நிலவரங்கள் குறித்தும் இரு தரப்பினரும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையிலான முக்கிய சந்திப்பொன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது. நேற்றுமுன்தினம் செவ்வாய்கிழமை மாலை கொழும்பில் அமைந்துள்ள இந்திய இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
இச்சந்திப்பின் போது, இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்தும், இலங்கையின் தற்போதைய சமகால அரசியல் முன்னேற்றங்கள் மற்றும் அண்மைக்கால அரசியல் நிலவரங்கள் குறித்தும் இரு தரப்பினரும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.
சந்திப்பு குறித்து இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடனான சந்திப்பின் போது இருநாட்டு உறவுகள் மற்றும் அண்மைக்கால அரசியல் குறித்து கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர மற்றும் அரசியல் ரீதியிலான தொடர்புகளைப் பேணுவதில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.





