இந்தோனேஷிய கடற்படையின் பாய்மரக்கப்பல் கொழும்பிற்கு வருகை
கமாண்டர் சுகெங் ஹரியான்டோ தலைமையிலான இந்த கப்பலில் தங்கியிருக்கும் காலத்தில், இலங்கை கடற்படையின் பயிற்சி அதிகாரிகள் பல்வேறு பயிற்சித் திட்டங்களில் பங்கேற்க உள்ளனர்.
இந்தோனேசிய கடற்படையின் பாய்மரக் கப்பலான க்ரி பிமா சுசி – 945, நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு நேற்றுமுன்தினம் புதன்கிழமை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. வருகை தந்த இக்கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை பாரம்பரியங்களுக்கு இணங்க வரவேற்றனர்.
இந்தக் கப்பலின் வருகையானது 'ஆசியான் பிளஸ் கெடட் செய்ல்' திட்டத்தின் ஒரு முக்கிய அங்கமாகும். இதில் இந்தோனேசிய கடற்படை வீரர்களுடன் 26 நாடுகளைச் சேர்ந்த பல்வேறு கடற்படை பயிலுநர்களும் வருகை தந்துள்ளனர்.
கமாண்டர் சுகெங் ஹரியான்டோ தலைமையிலான இந்த கப்பலில் தங்கியிருக்கும் காலத்தில், இலங்கை கடற்படையின் பயிற்சி அதிகாரிகள் பல்வேறு பயிற்சித் திட்டங்களில் பங்கேற்க உள்ளனர். அத்துடன் கடற்படை வீரர்கள் கப்பலின் செயல்பாட்டு முறைகளையும் அவதானிக்க உள்ளனர்.
மேலும், இரு நாட்டு கடற்படைகளுக்கும் இடையிலான நட்புறவை மேம்படுத்தும் வகையில் இலங்கை கடற்படையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் கப்பலின் பணியாளர்கள் கலந்துகொள்ள உள்ளனர். அத்துடன் நாட்டின் முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கும் அவர்கள் விஜயம் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.





