பொதுநலவாய பாராளுமன்ற கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்கும் இலங்கை பிரதிநிதிகள் குழு
இந்த மாநாட்டில் பொதுநலவாய நாடுகளைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற ஊழியர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

பொதுநலவாய நாடுகளின் பாராளுமன்ற மற்றும் அரசியல் பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்காக பொதுநலவாய பாராளுமன்றச் சங்கத்தால் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்படும் பொதுநலவாய பாராளுமன்ற மாநாடு 05-10-2025 ஆரம்பமாகவுள்ளது. எதிர்வரும் 12ஆம் திகதி வரை பார்படாஸில் இம்மாநாடு இடம்பெறவுள்ளது.
இந்த மாநாட்டில் பொதுநலவாய நாடுகளைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற ஊழியர்கள் கலந்துகொள்ள உள்ளனர். அதற்கமைய இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, இந்த ஆண்டுக்கான பிரதிநிதிகள் குழுவிற்கு, இலங்கை பாராளுமன்றப் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் தலைவரான மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சவித்ரி போல்ராஜ் தலைமை தாங்கவுள்ளார்.
இந்தக் குழுவில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணாதீர ஆகியோரும் அடங்குவர். இந்த வார காலப்பகுதியில் பல்வேறு உப மன்றங்கள் மற்றும் செயலமர்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், அமைச்சர் சரோஜா சவித்ரி பவுல்ராஜ் தலைமையிலான பிரதிநிதிகள் குழு இன்று பார்படாஸுக்குப் புறப்பட்டுள்ளது.