ஐ.தே.க. உறுப்பினர்களுக்கான தடைகளை நீக்குவதற்கு முடிவு
ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துகொண்ட ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களுக்கு செயற்குழு எடுத்த இந்த நடவடிக்கை காரணமாக மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து ஒத்துழைப்புடன் செயற்பட இருந்த தடைகள் நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துகொண்ட காரணத்தினால் கட்சி உறுப்புரிமை நிறுத்தப்பட்ட மற்றும் ஒழுகாற்று நடவடிக்கை எடுக்கப்பட்ட ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு அனைத்தையும் நீக்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி செயற்குழு தீர்மானித்துள்ளது.
ஐக்கிய தேசிய கட்சி செயற்குழு 09-17-2025 அன்று கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைவமையில் பிடகோட்டையில் அமைந்துள்ள சிறிகொத்த கட்சி தலைமையகத்தில் கூடி, இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதுடன் இது தொடர்பில் செயற்படும்போது எழக்கூடிய சட்ட பின்னணிகளை தேடிப்பார்ப்பதற்காக முன்னாள் சட்டமா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி திலக்மாரபன்ன தலைமையில் குழுவொன்றை நியமிப்பதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துகொண்ட ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களுக்கு செயற்குழு எடுத்த இந்த நடவடிக்கை காரணமாக மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து ஒத்துழைப்புடன் செயற்பட இருந்த தடைகள் நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் இருந்து கூட்டணியாக செயற்படுவதற்காக கலந்துகொண்ட அனைத்து தரப்பினருக்கும் நன்றி செலுத்தும் பிரேரணை ஒன்றும் இந்த செயற்குழு கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.